Suryan Explains

10 Tips for Pet Lovers in Tamil: செல்லப்பிராணி வளர்க்க ஆசை இருக்கா? இந்த 10 Steps உங்களுக்காக தான்…

10 Steps for Pet Lovers
10 Steps for Pet Lovers

10 Tips for Pet Lovers in Tamil: Pet Animals-னு சொன்னதுமே நமக்கெல்லாம் நம்ம மனசுக்கு ரொம்பவும் நெருக்கமா இருக்கிற பிடுச்ச செல்லப்பிராணிகள் தான் ஞாபகத்துக்கு வரும். சிட்டில வாழ்றவங்க வீட்ல பூனை, நாய், கிளி, மீன் தான் பெரும்பாலும் இருக்கும். ஆனா இபோலெல்லாம் அணில், ஆமை-ல இருந்து வெளிநாட்ல சிங்கம், புலி-னு செல்லப்பிராணிகளா வளத்திட்டு இருக்காங்க. இப்போ இன்டர்நெட் பாத்துட்டு மத்தவங்க வளக்குற விலங்குகளை பார்த்தும் தானும் ஒரு செல்லப்பிராணி வழக்கும்-னு பலர் ஆசைப்பட்டு செல்லப்பிராணிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிக்குறாங்க. ஆனா இவங்கனால செல்லப்பிராணிகள சரியா பராமரிச்சு பாத்துக்க முடியல, ஏன் தெரியுமா? செல்லப்பிராணிகள் வளர்கிறது அவோலோ சுலபமான விஷயம் கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியல.

  • நாய், பூனை, கிளி, மீன், மாடு-னு எந்த ஒரு செல்லப்பிராணி-ய நாம வளர்க்க ஆசைப்பட்டாலும் முதல நாம செய்ய வேண்டியது, அதுக்கான இடம். எப்பவும் செல்லப்பிராணிகள் குட்டிய இருக்கும் போது நாம அடிக்கடி தூக்கி கொஞ்சி விளையாடுவோம். அதுவே வளர்ந்துக்கு அப்புறம் நம்மனால தூக்க முடியாது. செல்லப்பிராணி வளர்க்க அதுக்கான இடத்த முதல நாம ரெடி செஞ்சு வச்சுக்கணும். கூடவே அந்த இடம் ஈசியா சுத்தம் செய்யுற மாதிரியும் சுகாதாரமா இருக்கனும்.
  • என்னதான் செல்லப்பிராணி-ய நாம நெசுச்சாலும் அதுக்காக ரெண்டுபேருமே தண்ணீர் & உணவ உபயோகப்படுத்த முடியாது. செல்லப்பிராணிகளுக்கான உணவு, நீர் எல்லாம் தனியா வச்சுக்கிறது நமக்கு நல்லது. அதுகளுக்கான ஒதுக்கப்பட்ட சுகாதாரமான இடத்துல தண்ணீர், உணவு-னு பிரிச்சு வச்சு பராமரிக்குறது ரொம்பவும் நல்லது. கூடவே நேரத்துக்கு உணவு குடுத்து பராமரிக்கணும்.
  • பொதுவாகவே வீட்ல வளர்க்கிற செல்லப்பிராணிகள் தண்ணீரை கண்டாலே பயப்படும். அதை சரியான நேரத்துல குளிப்பாட்டி சுத்தமா வச்சுக்கணும். ஒவ்வொரு விலங்குகளுக்கு இருக்கிற குணாதிசயம் பொறுத்து அவைகளை வகைப்படுத்தி அதுக்கான பராமரிப்ப பாத்துக்கணும். அடிக்கடி செல்லப்பிராணி ரோமங்களை சீவி சுத்தம் செய்யணும். இல்லைனா செல்லப்பிராணி விளையாடுற இடமெல்லாம் ரோமம் உதிர்ந்து அதனால நமக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை வரதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு.
  • செல்லப்பிராணிய வீட்லையே அடைச்சு வைக்காம வெளிய வாக்கிங் கூப்புட்டு போகணும். வெளிய கிடைக்கிற காத்து ரொம்பவும் நல்லது. முடுஞ்ச அடிக்கடி நீங்க வளர்கிற செல்லப்பிராணிய வெளிய கூட்டிட்டு போய் விளையாட விடுங்க. கூடவே உங்க செல்லப்பிராணிகளுக்கான விளையாட்டு பொருட்களை வாங்கி வச்சு எப்பவும் ஆக்ட்டிவ்-ஆ இருக்கிற மாதிரி பாத்துக்கோங்க. உடல் அசைவு, விளையாட்டு, சூரிய கதிர் நமக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களோடு ஆரோக்கியத்துக்கும் ரொம்ப அவசியமானது.
  • செல்லப்பிராணிகளுக்கு ரேபி தடுப்பூசி கட்டயாமா போடணும். 6 மாசம் முதல் 1 வருட இடைவெளி-ல உங்க செல்லப்பிராணி வகைக்கு ஏற்றவாறு முழு மருத்துவ பரிசோதனை செய்யணும்.
  • உங்க செல்லப்பிராணி-க்கு அடிக்கடி பல் துலக்கணும். ஒவ்வொரு செல்லப்பிராணி வகைகளுக்கு இந்த routine மாறும். மருத்துவர் கிட்ட நல்ல ஆலோசனைகளை கேட்டு உங்க செல்லப்பிராணி-களா பராமரிச்சு வாங்க. உங்க செல்லப்பிராணி வாய் துர்நாற்றம் அடிக்காம பாத்துக்காங்க. அப்படி இருந்தா உடனே மருத்துவர் ஆலோசனை அவசியம்.
  • வீட்ல இருக்கிற அபாய பொருட்களை மறச்சு வச்சுக்கணும். மெடிசின், எலக்ட்ரிசிட்டி இருக்கிற இடங்கள் எல்லாம் பாதுகாப்பது ரொம்பவும் முக்கியம். செல்லப்பிராணிகள் துறுதுறு-னு எல்லா இடைத்தலையும் விளையாடும். அப்போ அதுகளோட பாதுகாப்புக்கு எந்த ஒரு மெடிசின், விஷம் பொருட்களா இருக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகள், பாத்ரூம் கிளீனர் னு எல்லாத்தையும் மறச்சு வைக்கணும்.
  • ஒவ்வொரு பருவ கால சூழ்நிலைக்கும் ஏற்றவாறு செல்லப்பிராணிகள பராமரிக்கணும். கோடை காலத்துல நீர் வைக்குறதுல இருந்து தண்ணீர்-ல விளையாடுற போல அதிக நேரங்களை அதுக்காக செலவு செய்யணும். குளிர் காலத்துல செல்லப்பிராணி இருக்கிற இடத்தை கொஞ்சம் சூட இருக்கிற மாதிரி பராமரிக்கணும்.
  • செல்லப்பிராணி குட்டிய இருக்கும் போதே அவைகள நம்ம பழக்கவழக்கத்துக்கு ஏற்ற மாதிரி பழக்கணும். குறிப்பா சில அடிப்படை விஷயங்களை.. கூடவே செல்லப்பிராணி-ய நம்ம பேச்ச கேக்குற மாதிரி வளர்க்கணும்.
  • செல்லப்பிராணி-களோடு விளையாடும் போது உட்கார வைக்குறதுல தொடங்கி கை குடுக்கிறது என சில திறமையையும் பழக்குங்க.. செல்லப்பிராணி உணர்ச்சியை புரிஞ்சுகிட்டு அன்ப வெளிப்படுத்துங்க. செல்லப்பிராணி-களுக்கான மருத்துவர் நம்பரை save செஞ்சு வச்சுக்கிட்டு அவரச காலத்துல ஆணுகுற மாதிரி பிளான் பண்ணுங்க. எப்பவும் செல்லப்பிராணி-காண முதலுதவி (First -aid) கிட் ஈசியா எடுக்கிற மாதிரி இருக்கிற இடத்துல வச்சு, செல்லப்பிராணிய கவனிக்கணும்.

Article By Sakthi Harinath

About the author

Sakthi Harinath