Cinema News Stories

Bharathiraja: இயக்குநர் இமயம் பாரதிராஜா

RIP Bharathiraja
RIP Bharathiraja

நான்கு சுவர்களுக்குள் இருந்த தமிழ் சினிமாவை ஸ்டூடியோ செட்களிலிருந்து விடுவித்து, நிஜமான கிராமத்துத் தெருக்களுக்கும், மனிதர்களின் உணர்வுகளுக்கும் அழைத்துச் சென்ற மாபெரும் கலைப் பிதாமகன், இயக்குநர் இமயம் பாரதிராஜா.

“என் இனிய தமிழ் மக்களே…”
என்ற கணீர் குரலுடன் திரையில் தோன்றி, ரசிகர்களுடன் நேரடியாகப் பேசும் புதிய மரபைத் தொடங்கி வைத்தவர் பாரதிராஜா. அதுவரை மேக்கப் உடன்கூடிய செயற்கையான நாயகர்களைப் பார்த்துப் பழகிய தமிழ் ரசிகர்களுக்கு, அழுக்கு வேட்டியோடு சப்பணியாக கமலையும், பரட்டையாக ரஜினியையும், எதார்த்தமான கிராமத்துப் பெண்ணாக ஸ்ரீதேவியையும் காட்டி வியக்க வைத்தார்.

6 முறை தேசிய விருதுகள் ,
6 முறை தமிழ்நாடு மாநில விருதுகள்,
4 முறை ஃபிலிம் ஃபேர் விருதுகள் ,
பத்ம ஶ்ரீ விருது என வாழ்நாளில் தன் படைப்புகள் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜா வாங்கி குவித்த விருதுகள்

16 வயதினிலேவில் தொடங்கி ,
கிழக்கே போகும் ரயில் மூலம் பயணித்து,
கிராமங்களின் மண்வாசையை நுகர்ந்து,
தமிழ்த் திரையுலகை சிகப்பு ரோஜாக்களால் அலங்கரித்து ,
அதற்கு முதல் மரியாதையை பெற்றுத்தந்த இயக்குனர் இமயத்தின்
அலைகள் இன்று ஓய்ந்தது.

கலங்கரை விளக்கமாய் இருந்து பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய இந்த கிராமத்து கதாநாயகன், சினிமா என்னும் கலை இருக்கும் வரை அதன் இமயமாய் என்றும் இருப்பார்.பாரதிராஜாவின் அரை நூற்றாண்டு கால திரைப்பயணம், இந்திய சினிமாவின் வரலாற்றுப் புத்தகமாகும்.

கனத்த இதயத்துடன் இதய அஞ்சலி செலுத்துகிறது சூரியன் எப் எம்

Article By – RJ KAVIN