Specials Stories

Happy Birthday Madhan Karky: மதன் கார்க்கி ரசிகர் எழுதிருக்கும் வாழ்த்து!

madhan karky -happy birthday
madhan karky -happy birthday

மதன் கார்க்கியின் பிறந்தநாளில் அவரது ரசிகர் ஒருவர் பாராட்டு நிறைந்த உணர்ச்சிபூர்வமான கடிதத்தை எழுதியுள்ளார். இந்தக் கடிதம் அவர் சினிமா மற்றும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.


நன்றி அத்தனைக்கும் நன்றி

ஒரு தருணத்தில் மனச் சோர்வில் இருக்கும் பொழுது, ஒரு காணொளி மூலமாய் இவரின் கவிதையை கேட்டேன். நன்றி அத்தனைக்கும் நன்றி என்ற கவிதை. அக்கவிதையை கேட்டவுடன் என்னுள் ஓர் புத்துணர்ச்சி வந்தது. காயப்பட்ட காதல் ரணத்திற்கு மாமருந்து போல இருந்தது அக்கவிதை.

விளம்பரத்தை மட்டும் மையமாக கொண்டு வாழ்க்கை சக்கிரம் நகர்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், பூக்கடைக்கு விளம்பிரம் தேவையில்லை என்றாலும் இவருக்கு அறிமுகம் தேவை இக்கட்டுரையில். என் ரணங்களுக்கு மருந்தளித்த பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஆராய்ச்சி நிபுணர், மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவர் மதன் கார்க்கி அவர்களுக்கு முதலில் என் நன்றிகளை தெரியப்படுத்துகிறேன், நன்றி அத்தனைக்கும் நன்றி.

கண்டேன் காதலை திரைப்படத்தின் மூலமாய் அறிமுகம் ஆனவர் மதன் கார்க்கி. 2009-ம் ஆண்டு திரைதுறையில் முதல் காலடி வைத்து பல ஆண்டுகளாக திரைதுறையில் பயணிக்கிறார் பல விருதுகளும் பெற்றிருக்கிறார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். அத்தருணத்தில் குறும்பா என்ற பாடல் ரசிகர்கள் மனதில் தாய்மண்ணை ஈர்க்கும் காந்தம் போல் ரசிகர்கள் மனதில் ஈர்த்தது. அவ்வரிகள், விந்தை என்று கையில் வந்தாயே… என் மனம் குளிர… தந்தை என்று பட்டம் தந்தாயே… நான் தலை நிமிர… இவ்வரிகள் வரும் தருணத்தில் திரைஅரங்கமே அதிர்ந்தது. அந்த வரிகளில் திருமணம் ஆகாமலே நான் தந்தையாய் உணர்தேன் அவ்வரியில்.

ஒவ்வொவரு வருடமும் சிவராத்திரியின் போது பர்வதமலை, வெள்ளியங்கிரி மலை அல்லது திருவண்ணாமலை செல்வது எனக்கு வழக்கம் அதுவே என் பழக்கம். அப்படி இருக்கும் தருணத்தில் என் செவிகளில் இவர் எழுதிய ஒரு பாடல் மட்டுமே ஒலித்துகொண்டிருக்கும் பல சிவன்மலைகளில். அது என்னவென்றால் பாகுபலி படத்தில் இவர் எழுதிய பாடலில் ஒன்று சிவா சிவாயா போற்றியே நமச்சி வாய போற்றியே என்ற பாடல். ஒரு கலைஞனை பற்றி எழுத வேண்டுமானால் எழுதிக்கொண்டே இருக்கலாம், ஆனால் உங்களில் நேரம் கருதி ஒன்றை மட்டும் எழுதுகிறேன்.

என்றென்றும் தமிழோடும், கலையோடும், திரையோடும் உங்கள் எழுத்து பயணிக்க வேண்டும், மக்கள் மனதில் பதிய வேண்டும்..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்களுக்கு.

Article By RJ ர.சதீஷ்.