கும்பமேளா
கும்பமேளா – தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படக்கூடிய திருவிழா, ஆன்மிக சார்ந்த விஷயங்களுக்கு பொதுவாக இருக்கும் எதிர்பார்ப்புகளை தாண்டி உலகமுழுவதும் பெரிய பிரபலங்கள், ஆன்மீக சான்றோர்கள், பொது மக்கள், அகோரிகள் என ஒவ்வொரு உயிரும் கொண்டாடும் பண்டிகை, கும்பமேளா. உலகின் மிகப் பெரிய விழாவாகவும், அதிகமான மக்கள் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ள விழா இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான்.
உலக தொழில்நுட்பத்தில் பலரை கவர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ட்டேவ் ஜாப்ஸ்-ன் மனைவி Laurene Powel Jobs தற்போது இந்தியா வந்துள்ளார், ஒரு மாத காலம் கும்பமேளா நிகழ்ச்சியில் கல்பவாசம் விரதம் (யோகி வாழ்க்கை) வாழ பங்கேற்க வந்துள்ளார். இவர் மட்டுமின்றி உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடிக்கணக்கான மக்கள் இந்த கும்பமேளா திருவிழாவிற்கு வருகை தருகின்றனர்.
2025, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடக்கக்கூடிய இந்த மகா கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. ஆன்மீக பூமியில் அடையாளமாக இருக்கக்கூடிய இந்தியாவில் இந்த கும்பமேளா நிகழ்ச்சிக்காக முதல் நாளிலே லட்சக்கணக்கான மக்கள் வந்துள்ள நிலையில் பிப்ரவரி 26 ஆம் நாள் முடியும் இந்த விழாவில் மொத்தம் 40 கோடி மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன் எச்சரிக்கைகள் செய்து வரும் இந்தியா அரசு 4000 ஹெக்டர் பரப்பளவில் பக்தர்களுக்கு தங்கும் ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் பல ஏற்பாடுகள் செய்து வருகிறது.
உலகையே திரும்பி பார்கவைத்திருக்கும் இந்த கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பு என்னவென்றால் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும் என்பதே ஆகும். இந்தியாவில் பிரபலமான புராணக்கதைகள் ஆன மகா பாரதம், ராமாயணம், பகவது புராணம், விஸ்ணு புராணம் போன்ற பல கதைகளில் இந்த கும்பமேளா சார்ந்த விஷயங்கள் இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டு பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. அலகாபாத், அரித்வார், உஜயன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் தான் அமிர்த பானம் சொட்டு விழுந்த இடங்கள் ஆகும்.
கும்பமேளா நான்கு பிரிவுகளில் கொண்டாடப்படுகிறது.
- மகா கும்பமேளா
- பூர்ண கும்பமேளா
- ஆர்த் கும்பமேளா
- கும்பமேளா
- மாஃஹ் கும்பமேளா
மகா கும்பமேளா
பிரயாக்ராஜ் என்ற இடத்தில் நடைபெறுகிறது. இந்த திருவிழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும். இம்முறை 2025ல் நடக்கும் கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கக்கூடிய மகா கும்பமேளா ஆகும்.
பூர்ண கும்பமேளா
12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கக்கூடிய விசேஷம் தான் இந்த பூர்ண கும்பமேளா. இந்த திருவிழா இந்தியாவில் அலகாபாத், அரித்வார், உஜயன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் நடந்து வருகிறது.
ஆர்த் கும்பமேளா
6 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா. இந்த திருவிழா அலகாபாத், அரித்வார் ஆகிய இடங்களில் மட்டுமே நடக்கும்.
கும்பமேளா
அலகாபாத், அரித்வார், உஜயன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் பண்டிகை ஆகும்.
மாஃஹ் கும்பமேளா
மகரம் ராசி சார்ந்த ஜோதிடம் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில் இந்த கும்பமேளா நிகழ்ச்சி நிர்ணயிக்கப்படும். (மினி கும்பமேளா) ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்திற்குல் இந்த கும்பமேளா திருவிழா நடத்தப்படும்.
144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு பக்தர்கள் திரிவேணி சங்கமம் (கங்கை, யமுனை, சரஸ்வதி) ஆறுகள் இணையும் இடங்களில் புனித நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.