Suryan Explains Videos

ஏன் இந்த இடத்தில் ஒரு பாலம் இல்லை | strait of gibraltar | அப்படி என்ன நடக்கிறது | Suryan Explains

strait of gibraltar
strait of gibraltar - suryan explains

வெறும் 14 கிலோமீட்டர் இருக்கிற இரண்டு கண்டத்தை இணைக்கிறதுக்கு இந்த இடத்துல ஏன் பாலம் இல்ல அது ஏன்னு தெரியுமா???????

இதுதான் The strait of gibraltar Atlantic மற்றும் Mediterranean பெருங்கடல்களை இணைக்கும் ஒரு குறுகிய strait ஆகும். இந்த சின்ன கடல் பாதை உலகின் ரெண்டு முக்கியமான continents களை பிரிக்குது அதுதான் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா, இந்த ரெண்டு கான்டினென்ட்ஸ்க்கும் இடையில உள்ள தூரம் வெறும் 77 நாட்டிகல் மைல்ஸ் அதாவது 142 km மட்டுமே இந்த தூரம் ஒரு பக்கத்துல இருந்து பார்த்தா இன்னொரு கான்டினென்ட் எளிதா தெரியும் ஆனா இந்த ரெண்டு கான்டினென்ட்ஸையும் இணைக்கும் வகையில ஒரு பாலம் கூட இதுவரைக்கும் கட்டப்படல.

உண்மையிலேயே உலக அளவுல 60க்கும் மேற்பட்ட கடல் வழி பாலங்கள் இருக்கு அதுவும் இந்த 142 km தூரத்துக்கும் நீளமான உள்ள கடல் வழிப்பாலங்கள் இருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடில இருந்தே இந்த ரெண்டு கண்டங்களையும் இணைக்க நிறைய திட்டங்கள் போடப்பட்டது இதனால யூரோப்பியன் யூனியனின் 449 மில்லியன் மக்களையும் ஆப்பிரிக்காவின் 152 பில்லியன் மக்களையும் இணைக்க இப்படி செய்யறதுனால, இந்த ரெண்டு கண்டங்களின் பொருளாதாரம் உயரும் இவங்களுக்கு இடையில உள்ள வர்த்தகம் மேம்படும் போக்குவரத்து சிறப்பாக இருக்கும் சுற்றுலாபம் பெரிய அளவுல அதிகரிக்கும் இப்படி பல நன்மைகள் இருந்தும் ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில ஒரு பாலம் கூட இல்லை இதுக்கு என்ன காரணமாக இருக்கும்?

இங்க ஏன் பாலம் கட்டப்படலைன்னு சொல்றதுக்கு முன்னாடி இங்க நடக்கும் வர்த்தகத்தை பத்தி சொல்றேன் கேளுங்க ரெண்டு முக்கியமான பெருங்கடல்களான Atlantic மற்றும் Mediterranean பெருங்கடல்களை இணைக்கும் இந்த The Strat of Gibraltar 36 மைல் அதாவது 57 km நீளம் கொண்டது இதோட அகலம் ஸ்பெயின்ல உள்ள Point Maroc மற்றும்ஒரு Morocco வில் உள்ள Point Cyrus இடையில 142 km மட்டுமே இந்த ஸ்ட்ரைட்டோட ஆழத்தை பத்தி சொல்லணும்னா அது 1200 அடி ஆழம் இந்த ஸ்ட்ரைட் ரொம்ப சின்னதாக இருந்தாலும் Mediterranean கடலுக்கும் Atlantic கடலுக்கும் இடையில இயற்கையா உருவான உலகின் முக்கியமான கப்பல் பாதைகள்-ல இதுவும் ஒண்ணாகும் இதை புரியுற மாதிரி சொல்லணும்னா Suez Canal.

இந்த Canal மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாய் இது ரெட் சீக்கும் மத்திய திரை கடலுக்கும் இடையில கப்பல்களுக்கு பாதையை வழங்குது Suez Canal-லின் அகலம் ரொம்ப குறுகலா இருக்கிறதுனால பெரிய அளவிலான கப்பல்கள் இங்க சிக்கிக்கும் அபாயம் இருக்கு அதுவே Strait of Gibraltar பெரிய அளவு காரணமா தினமும் ஏராளமான பெரிய கப்பல்கள் இந்த Strait வழியா போகுது இதை data படி சொல்லணும்னா ஆண்டுக்கு 14000 கப்பல்கள் பனாமா கெனால் வழியா போகுது ஆண்டுக்கு 20000 கப்பல்கள் Suez Canal வழியா போகுது அதுவே Strait of Gibraltar வழியா ஆண்டுக்கு ஒரு லட்சம் கப்பல்கள் போவதாக சொல்லப்படுது அப்போ இந்த Strait of Gibraltar எவ்வளவு busyயான கப்பல் பாதைன்னு யோசிச்சு பாருங்க.

இந்த ஸ்ட்ரைட் வழியா போகும் பல சரக்கு கப்பல்கள் Western Hemisphere இருந்து Middle East Africa மற்றும் Europe-க்கு விலை உயர்ந்த பொருட்களை கொண்டுகிட்டு போகுது இது மட்டுமில்ல ஸ்ட்ரைட் ஆஃப் கிபரல்தர் பாசில் நிறைஞ்ச நாடுகளுக்கு பக்கத்துல இருக்கிறதுனால ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எறிவாயுவை கொண்டு செல்லும் பல கப்பல்கள் இந்த ஸ்டேட் வழியாதான் போகுது இந்த ஸ்டேட் வழியா தினமும் 300 ஆயில் Tankers போவதாக சொல்லப்படுது இந்த ஆயில் Tankerகளின் மதிப்பு பல மில்லியன் டாலர்ஸ் ஆகும் Strait of Gibraltar.

உலகசந்தைகளுக்கு ஒரு முக்கியமான வர்த்தக பாதையாகும் இவ்வளவு நிதி பலன்கள் மற்றும் நன்மைகள் இருக்குன்னா அப்புறம் ஏன் இந்த ரெண்டு கான்டினென்ட்ஸையும் இணைக்க ஒரு பாலம் கூட கட்டப்படலைன்னு இப்ப நீங்க கேட்கலாம். இந்த கேள்விக்கான பதிலை சொல்றேன் கேளுங்க…

இந்த பிரிட்ஜை பத்தி இவங்க யோசிக்காம இல்ல 1979 ஆம் ஆண்டு முதல் Feasibility Investigation நடந்தது இதுல பல ஆய்வுகள் மற்றும் கொடுக்கப்பட்டது. ஆனால் சில சிக்கல்கள் இந்த பாலத்தை கட்டுறதுல இருந்ததுனால இந்த பாலத்தை கட்டுறது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாதுன்னு நம்பப்பட்டது. எதனாலன்னா முதலாவதா இரு நாடுகளுக்கு இடையில இருக்கும் அரசியல் சூழல்னால Spain மற்றும் Morocco அரசாங்கங்களுக்கு இடையில கருத்து வேறுபாடும், டென்ஷனும் இருந்தது. இதன் காரணமா இந்த பிரிட்ஜை யாரு கட்டுவதுங்கிற குழப்பம் இருந்தது இரண்டாவதா இந்த பாலத்தை கட்டும் செலவு சில எஸ்டிமேட்ஸ் படி இங்க ஒரு பாலம் கட்டுறதுக்கு 5 பில்லியன் டாலர்ல இருந்து 20 பில்லியன் டாலர் வரை செலவாகும்னு மதிப்பிடப்பட்டிருக்கு ஏன்னா உலகம் முழுக்க இருக்கிற மத்த பாலங்களை ஒப்பிடும்போது இந்த பாலத்தோட கட்டுமானத்துல ரொம்ப கடினம் இருக்கு அதாவது இங்க எந்த பாலம் கட்டினாலும் அதை உலகின் மிகப்பெரிய கப்பல்கள் கூட எளிதா கடந்து செல்லும் வகையில வடிவமைக்கப்படணும்.

இதை சொல்றது ஈஸி ஆனா நடைமுறைன்னு வரும்போது இந்த கட்டமைப்பு ரொம்ப கடினமானது இந்த அஞ்சிலிருந்து 20 பில்லியன் டாலர் கட்டுமான செலவை யாரு செய்வாங்கிறதுதான். இங்க கேள்வி இந்த செலவை ஒன்னு வெளிநாட்டு நிறுவனம் ஏதாவது எடுத்து செய்யணும் இல்லைன்னா இந்த ரெண்டு நாட்டுல யாராவது ஒருத்தர் முன்வந்து செய்யணும் இந்த விஷயத்துல ஸ்பெயின் மற்றும் மொராக்கோ ஸ்பெயின் அரசாங்கம் இந்த பாலம்னால மொரோக்கோவுக்கு தான் அதிக பயனு சொல்றாங்க. இதனால இந்த பாலத்தை கட்டும் செலவை மொரோக்கோ தான் அதிகமா எடுக்க சொல்றாங்க.

அதே சமயம் மொராக்கோ அரசாங்கம் இந்த பாலத்தின் கட்டுமான செலவை இரு நாடும் சமமாக எடுக்கணும்னு சொல்றாங்க. ஸ்ட்ரைட் ஆஃப் கிப்ரல்தர்ல சராசரி ஆழம் 1200 அடி ஆனா சில இடங்கள்ல கடலின் ஆழம் 3000 அடியை எட்டியது இவ்வளவு ஆழத்துல இருந்து ஒரு பாலத்தின் தூண்களை கட்டணும்னா அது உலகின் மிக உயரமான கட்டிடமாக சொல்லப்படும் புர்ஜ் கலீபாவை விட அதிகமாகும்.இங்க இருக்கிற நீரின் வலுவான Water currents ஒரே மாதிரியா இருக்கிறது கிடையாது கடலின் ஆழத்துல நீர் கிழக்கிலிருந்து மேற்கை நோக்கி நகருது அதுவே கடலின் மேற்பரப்புல நீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகருது இதனால இங்க உயரமான தூண்களை கட்டினா ரெண்டு சைடுல இருந்து வரும் தண்ணீர் தூண்கள் மேல அதிக அழுத்தத்தை கொடுக்கும் இதனால இந்த பாலம் கட்டுமானம் இன்ஜினியர்ஸ்க்கு பெரிய சவாலாக இருந்து வருது.

இங்க ஒரு பிரிட்ஜ் கட்டப்பட்டாலும் இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடையாது, அது என்னன்னா நம்ம பூமியின் tectonic plates பல பிரிவுகள்னால ஆனது இந்த tectonic plates தொடர்ந்து நகர்ந்துகிட்டே இருக்கும் ரெண்டு இல்லைன்னா அதுக்கும் அதிகமான tectonic plates இருக்கும் இடத்துல பூகம்பங்கள் உட்பட பல Geological Activities நடக்கும் துரதிஷ்டவசமா ஸ்ட்ரைட் ஆஃப் கிப்ரல்தர் ஆப்பிரிக்கா மற்றும் யுரேசியன் Plates சந்திக்கும் இடத்துல அமைஞ்சிருக்கு அதாவது இந்த tectonic platesக்கு மேலேயே உட்கார்ந்து இருக்கு இதனால இங்க பாலம் கட்டப்பட்டாலும் அதன் விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும்.

இந்த பகுதியில ஏற்படும் நிலநடுக்கங்கள்ல இருந்து தப்பிக்கிறது காலத்தின் கையில மட்டுமே இருக்கும் 1755-ல இங்கே ஏற்பட்ட நிலநடுக்கம் 85 மற்றும் ஒன்பது ரிக்டர்களுக்கு இடையில இருந்தது இதனால போர்ச்சுகல் ஸ்பெயின் மற்றும் மொராக்கோல மிக மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது எல்லா ஆபத்துகளையும் தாண்டி அப்படியே இங்க பாலம் கட்டினாலும் Strait of Gibraltar கடல் தளமும் நிலையானதாக இல்லை ஏன்னா Strait க்கு அடியில மென்மையான களிமண் அடுக்குகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க அது எந்த ஒரு கட்டுமானத்தையும் தாங்காதுன்னும் சொல்றாங்க அதுக்குன்னு இந்த ரெண்டு கான்டினென்ட்ஸை இணைக்கவே முடியாதுன்னு அர்த்தமில்லை UK மற்றும் France ku நடுவுல கட்டப்பட்ட Channel Tunnel மாதிரியே இங்கேயும் ஒரு கடலுக்கு அடியில போகும் Tunnel கட்டலாம்னு யோசிக்கப்பட்டது, ஆனா அது கட்டப்பட்டா ஆப்பிரிக்காவில் இருந்து Refugees மற்றும் Illegal immigrationஎண்ணிக்கை அதிகரிக்கும்னு Spain and European Union நம்புறாங்க இந்த எல்லா காரணங்கள்னால ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் இணைக்கும் பாலம் இன்றுவரை அமைக்கப்படவே இல்லை ஆப்பிரிக்காவையும் ஈரோப்பையும் கண்டிப்பா ஒரு பாலம் கட்டி இணைக்கணும்னு நினைக்கிறீங்களா உங்க பதிலை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.

About the author

alex lew