Cinema News Stories

கதாநாயகன் ‘கார்த்தி’

உனக்கென்னப்பா நீ ஹீரோ பையன், அண்ணனும் ஹீரோ நீ இருமினா உன்ன தேடி ஜூஸ் வரும். உனக்கென்னப்பா நீ ஹீரோ பையன், நீ சொன்ன ஷூட்டிங்கயே Cancel பண்ணிருவாங்க. அப்டி இப்டினு சின்ன வயசுல இருந்து அப்பாவோட பதவி, பேரு, Success, பையனோட வாழ்க்கைல தொடர்ந்துட்டே இருக்கு. அந்த ஒரு Success Pressure நம்மள அத விட Successful ஆகணும்னு சொல்லி தெரிஞ்சும் தெரியாமலும் கேட்டுக்கிட்டே இருக்கும்.

அப்டி ஒரு Success Pressure-ல இருந்தவர் தான் Actor கார்த்தி. ரொம்ப ஜாலியான ஒரு வாழ்க்கைய Start பண்ண கார்த்தி, UG முடுச்சிட்டு PG நியூயார்க்ல பண்ணாரு. அங்க ஒரு Curiosity வந்து ஒரு Spark Start ஆச்சு… அதுனால தான் இன்னைக்கு இவ்ளோ Strong-ஆன Successful-ஆன Characters-ல Intense Role-ல பாக்க முடியுது.

இந்த 2023-ல தான் கார்த்தி அவரோட 23 Years of Kollywood-அ 26 படங்களோட Complete பண்ணிருக்காரு. எப்டி சீயான் விக்ரம் ஒரு படத்துல பண்ண Role-அ இன்னொரு படத்துல Replicate பண்ணதில்லையோ அதே போல கார்த்தி Choose பண்ற Role-ம் Replicate ஆகாது.

வெளிநாட்டுல படிச்ச ஒருத்தருக்கு கண்டிப்பா பருத்திவீரன் மாதிரியான ஒரு கதைக்களத்த புரிஞ்சிக்கிறது கஷ்டமா தான் இருந்துருக்கும். ஆனா அதையே Challenge-ஆ எடுத்துட்டு சூப்பரான அறிமுகம் குடுத்தாரு. கார்த்தியோட முதல் 5 படங்களுமே Box Office-அ நிரப்புன படங்கள் தான். Once அவரு பேர் Register ஆனதும் Challenging Genres Try பண்ண ஆரம்பிச்சாரு. முக்கியமா தமிழ், தெலுங்கு Bilingual படமா நடிக்க ஆரம்பிச்சாரு.

தீரன் அதிகாரம் ஒன்று மாதிரியான ஒரு Serious Movie, கடைக்குட்டி சிங்கம் மாதிரியான குடும்ப படம் குடுத்ததுக்கு அப்றம் அவர அடுத்த கட்டத்துக்கு கொண்டு போன ஒரு படம் தான் “கைதி”. National Wide திரும்பி பாக்க வெச்ச படம். அடுத்து ஒரு வித்யாசமான Historical Adventure Movie பொன்னியின் செல்வன்… ஒரு வீரன்; காதலன்; புத்திசாலி மூணையும் Carry பண்ணிருப்பாரு.

இப்டி ஒரு Extra Ordinary Actor, Charming Playboy தமிழ் சினிமாக்கு கெடச்சதுக்கு தமிழ் சினிமாவே பெரும படணும். HAPPY BIRTHDAY HERO KARTHI SIR. WE LOVE YOU!

Article By RJ Naga

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.