Cinema News Specials Stories

தமிழ் சினிமாவின் அடையாளம்!

சில பேருக்கு அவங்க பெயர் அடையாளமா இருக்கும். சில பேருக்கு அவங்க அடையாளமே ஒரு பெயரா இருக்கும். ஆனா ரொம்ப குறைவான சில பேருக்கு தான் அவங்க பெயரும் அடையாளமும் ஒரே மாதிரி இருக்கும்.

அப்படிப்பட்ட ஒருத்தர் தான் இயக்குனர் வெற்றிமாறன். பெயருக்கு ஏற்ற மாதிரி வெற்றி படங்களை நமக்குக் கொடுத்து, சமூகம் சார்ந்த படைப்புகள் மூலமா மாற்றங்களையும் கொடுத்து இருக்காரு. இதை எல்லாம் செய்த வெற்றிமாறனுக்கும் அவருடைய இளம் வயது வாழ்க்கைல பல மாற்றங்களும் தடைகளும் நடந்து இருக்குங்க.

செப்டம்பர் மாதம் 4-ம் தேதி 1975-வது வருடம் கடலூர் மாவட்டத்துல பிறக்குறாரு. தன்னோட கல்லூரி நாட்கள்-ல தான் ஒரு இயக்குனர்-னு தெரியாம இருந்த நேரத்துல B.A. English Literature படிச்சிட்டு இருக்கும் போது, அவரோட ஆசிரியர் நீ ஒரு இயக்குனரா வருவ-னு அவருடைய திறமையை முதலில் கண்டுபுடிக்குறாரு.

அதோட மட்டும் இல்லாம, இயக்குனர் பாலு மகேந்திரா கிட்டயும் அறிமுகப்படுத்தி விடுறாரு. அவருக்கு உதவி இயக்குனராக பணியாற்றி தான் கலை உலகத்துல தன்னோட காலடி-யை பதிக்குறாரு வெற்றி. தன்னோட முதல் படத்த இயக்க கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகி இருக்குங்க நம்ம வெற்றிமாறனுக்கு.

இந்த 7 வருடத்துல தன்னோட உயிருக்கு உயிரான காதல் ஒரு பக்கம், பையனோட எதிர்காலத்தை நினைத்து அப்பாவின் பயம் ஒரு பக்கம், தன்னோட எதிர்காலம் என்ன ஆகுமோ-னு சிந்தனை ஒரு பக்கம், இப்படி இந்த 7 வருஷமும் அவரோட வாழக்கை சோதனையாவே தான் இருந்துச்சு.

சோதனையை கடந்தால் தான் சாதனையை படைக்க முடியும்-னு சொல்ற மாதிரி, தன்னோட முதல் படமான பொல்லாதவன்-ல ஆரம்பிச்சு இப்போ சமீபத்துல வந்த விடுதலை படம் வரை எல்லாமே இவரோட பெயருக்கான சிறந்த அங்கீகாரம் தான்.

Vetrimaran

ஒரு சூப்பரான கமர்ஷியல் இயக்குனரா 2007-ல பொல்லாதவன் படம் மூலமா அறிமுகமானாரு. அடுத்து 4 வருஷம் கழிச்சு ஆடுகளம் 2011-ல ரிலீஸ். படம் முழுக்க வெற்றிமாறன் ஸ்டைல்ல இருந்துச்சு, சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து 5 வருசம் கழிச்சு 2016-ல வெற்றிமாறன் இயக்கத்துல விசாரணை படம் உலக சினிமா தரத்துல வந்துச்சு.

பல விருதுகளும் வாங்குச்சு. அடுத்த 2 வருசம் கழிச்சு 2018-ல வட சென்னை வெளியாகி வேற லெவல் ஹிட் ஆச்சு. அதோட இரண்டாவது பாகத்துக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் பல வருசமா காத்துட்டு இருக்காங்க. அடுத்து 2019-ல அசுரன் படம் பண்ணாரு. பாக்ஸ் ஆபிஸ் ஹிட். வெற்றிமாறன் படங்கள்ல அதிகம் பேசப்பட்ட, கொண்டாடப்பட்ட படம்னா அது அசுரன் தான்.

அடுத்து 2020-ல பாவக்கதைகள் Anthology-ல ஓர் இரவு-னு ஒரு Short Film பண்ணாரு. அதுலயும் வழக்கம் போல நம்ம சமுதாயத்துக்கு தேவை இல்லாத ஒரு விஷயத்த பத்தி அழகா பேசியிருப்பாரு. கடைசியா 2023-ல விடுதலை பாகம் 1 வெளியாச்சு. வழக்கம் போல வெற்றி மாறனுக்கு வெற்றி தான். அடுத்து விடுதலை பாகம் 2, வாடிவாசல், வடசென்னை 2-னு வரிசையா படங்கள் இருக்கு.

எப்போதான் வடசென்னை-2 வரும்-னு கேக்காத ஆளு இல்லை. அந்த அளவுக்கு இவரோட படைப்புகள் இவருக்கு ஒரு அடையாளமா இருக்குங்க. தமிழ் சினிமாவின் தரத்த அடுத்த கட்டத்துக்கு தூக்கிட்டு போன இயக்குநர்கள்ல இவர் ரொம்ப முக்கியமானவர். அடுத்து வரும் இவருடைய படைப்புகள் மூலமா தமிழ் சினிமா அடுத்த கட்ட உயரத்துக்கு நிச்சயமா போகும்.

இந்த பிறந்தநாள் அவருக்கு மிக சிறப்பா இருக்கவும், இன்னும் பல படைப்புகள் நமக்கு கொடுக்கவும் மனசார கேட்டுக்குறோம்.

Article By RJ Karthik