ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. இந்த வசனத்திற்கு உதாரணமா ஒரு படத்தை சொல்லேன்னு யார்கிட்டயாவது நீங்க கேட்டீங்கன்னா இவருடைய படத்தை தான் சொல்லுவாங்க. ஆமா, இயக்குனர் செல்வராகவன் அவருடைய படம் தான்.
யார்கிட்டயும் பேசாம தனிமைல தவிச்சிட்டு இருந்த ஒருத்தன எல்லார் மாதிரியும் சாதாரண மனுஷனா மாத்தி அவன் வாழ்க்கையே மாற்றினது காதல் கொண்டேன் திவ்யா. பசங்களோட சேர்ந்து ஜாலியா சுத்திக்கிட்டு வாழ்க்கைல அடுத்து என்ன பண்ண போறோம்னு கொஞ்சம் கூட ஐடியா இல்லாத, தனக்குள்ள என்ன திறமை இருக்குன்னு தெரியாம தன்னைத்தானே முட்டாள்னு நெனச்சுக்கிட்டு இருந்த ஒரு பையன, உனக்குள்ள திறமை இருக்கு நான் உன்ன நம்புறேன் உன்னால சாதிக்க முடியும்னு கதிரா மாத்துனது 7G ரெயின்போ காலனி அனிதா.
காசு பணத்து பின்னாடி ஓடாம தனக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பண்ணி வாழ்க்கைல முன்னேறனும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்ச கார்த்தியை, ஊர் உலகமே ஒதுக்கி தள்ளி நீ வேஸ்ட்னு சொல்லும்போது, நீ உனக்கு பிடிச்சத பண்ணு எப்பவும் நான் உன் கூட இருப்பேன் நீயும் கண்டிப்பா வாழ்க்கையில சாதிப்பனு, கார்த்தியோட எல்லா Mood Swings-ஐயும் தாங்கிக்கிட்டு கார்த்திய வாழ்க்கையில வெற்றியடைய வெச்சது யாமினி.
இவருடைய கதைல வர எல்லா கதாநாயகிகளும் உண்மையாவே கதைகளை தாங்கி நிற்கும் நாயகிகள் தான். இப்படி வாழ்க்கையில் வெற்றி அடையும் கதாநாயகர்களை உருவாக்கிய, கதாநாயகிகளை உருவாக்கியவர் செல்வராகவன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.