ஒரு படத்துல ஹீரோயினா வருவாங்க, கொஞ்சம் குழந்தை தனமா எதாவது பண்ணுவாங்க. அப்புறம் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாங்க, உருகி உருகி ஹீரோ வ லவ் பண்ணுவாங்கனு இருந்த கால கட்டம் அது. அப்படிப்பட்ட காலகட்டத்துல தமிழ் சினிமாக்கு கிடைச்ச அறுந்த வாலு மீரா ஜாஸ்மின்.
எல்லாரும் ஒரு பாதைல போய்ட்டு இருக்கப்போ, கிடைச்ச படத்துல கூட தனக்கான முக்கியத்துவத்தை தீர்மானம் பண்ணாங்க மீரா ஜாஸ்மின். ரன் படத்துல வர அறிமுக காட்சில எப்படி மீரா ஜாஸ்மின பாத்து மாதவன் பிரமிச்சு போனாரோ அதே நிலைதான் தமிழ் ரசிகர்களுக்கும் அந்த சமயத்துல. அந்த படத்துக்கப்புறம் இந்த பேரழகியோட நடிப்புக்கும், துரு துரு அழகுக்கும் அடிமையா மாறினாங்க.
அப்புறம் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயனானு எந்த படமா இருந்தாலும் யாரு ஹீரோவா இருந்தாலும் தனக்குனு முக்கியத்துவம் இருக்குற கதாபாத்திரங்கள தேடி தேடி நடிச்சாங்க. அப்படி அவங்க திறமைக்கு பரிசா கிடைச்சதுதான் மணி சாரோட ஆயுத எழுத்து படத்துல கிடைச்ச வாய்ப்பு.
அந்த சசி கதாபாத்திரத்துக்காக தமிழ் நல்லா பேச கத்துகிட்டு அப்புறம் நடிச்சு குடுத்தாங்களாம் மீரா ஜாஸ்மின். இந்த மெனக்கெடல் தான் இன்னைக்கு வரைக்கும் அவங்க நடிப்பை பத்தி பேச வைக்குது. சசி, பிரியா, ஆர்த்தினு வித விதமான கதாபாத்திரங்கள்ல மீரா ஜாஸ்மின் நடிச்சிருந்தாலும் இன்னைக்கு வரைக்கும் ரசிகர்கள் மனசுல பசை போட்டு ஒட்டினது என்னமோ சண்டக்கோழி “ஹேமா” தான்.
சாமி வந்த மாதிரி நடிச்சு அப்பாவையே ஏமாத்தறது, அண்ணனையே கொழப்புறதுனு அறுந்த வால் ஹேமாவாவே வாழ்ந்திருப்பாங்க. இன்னைக்கு கூட 90’s கிட்ஸ் கிட்ட எப்படி பட்ட பொண்ணு வேணும்னு கேளுங்களேன் எல்லாரும் சண்டைக்கோழி ஹேமாவை தான் உதாரணமா சொல்லுவாங்க .
தல, தளபதினு பல முக்கியமான ஹீரோஸ் கூட மீரா ஜாஸ்மின் நடிச்சிருந்தாலும், மீரா ஜாஸ்மின்காகவே அவங்க ரசிகர்கள் அவங்களோட படத்த பார்த்ததுதான் மீரா ஜாஸ்மினோட வெற்றி. 2000-ல இருந்து பலரோட மனச தன்னோட நடிப்பால் கவர்ந்த இந்த நடிப்பு ராட்சசி கடந்த 5 வருஷமா பெருசா படங்கள்ல நடிக்கல.
ஆனா இப்ப மலையாளத்துல ஒரு படத்துல கமிட் ஆயிருக்காங்களாம். அதோட சமூக வலைதளத்துலயும் தன்னோட ரசிகர்களுக்காக கணக்க தொடங்கிருக்காங்க. 90s கிட்ஸோட ட்ரீம் கேர்ள் மீராக்கு ரசிகர்கள் சார்பா சொல்றது ஒன்னே ஒண்ணுதான். Welcome சேச்சி! பழைய மீராவா வாங்க!
90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த மீரா ஜாஸ்மினுக்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.