நம்ம எல்லாரையும் ’இசை’ ரெண்டு உச்சத்துக்கு கொண்டு போகும், ஒரு பக்கம் நம்மல ரொம்ப சந்தோஷமாக்கும், இன்னொரு பக்கம் நம்மல ரொம்ப சோகமாக்கும். அந்த இசையோட இரு துருவங்கள் பத்தின கதை தான் “இசை”.
நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவ நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அவருக்குள்ள இயக்குனரா ஒரு மிகப்பெரிய அரக்கன் இருக்கான், அது அவரோட ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். 2005-க்கு அப்பறம் சில காலங்களா அந்த இயக்குனர் அவதாரத்துக்கு ஓய்வு கொடுத்தார்னு நெனச்சோம், ஆனா பத்து வருஷமா அந்த அவதாரத்த Update பண்ணிட்டே இருந்தாருனு 2015-ல இசை படம் ரிலீஸ் ஆன அப்பறம் தான் தெரிஞ்சது.
“இசை” படத்த பாத்த பலருக்கும் தெரியும், அதுல வெற்றி செல்வனா வர சத்யராஜ் கதாபாத்திரம் இசைஞானிய நியாபகப்படுத்தும், “சிவா”வா வர எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் இசைப் புயல நியாபகப்படுத்தும். இந்த படத்துக்கு இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா பலர்கிட்ட கேட்டாரு. ஆனா அவருக்கு வந்த பதில் நீங்களே இசையமைச்சிடுங்கனு, அதுலயும் நம்ம இசைப்புயல் கிட்ட தான் மொதல்ல கேட்டாரு.
அந்த முடிவு சரியாவும் இருந்துச்சுனு “இசை” பட பாடல்கள கேக்குற நமக்கும் தோணுச்சு, அதுக்கு காரணம் எஸ்.ஜே.சூர்யா. இசை படம் படப்பிடிப்புக்கு முன்னாடியே முறையா இசை கத்துக்கிட்டாரு. இதுல இன்னும் சிறப்பே இசை ஆல்பம்ல சூப்பர் ஹிட்டான “புத்தாண்டின் முதல் நாள் பாட்ட எஸ்.ஜே.சூர்யாவே பாடியிருப்பாரு.”
நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு, பாடகர்னு எஸ்.ஜே.சூர்யா பத்து வருஷ கலை பசிய தீக்க ஒரு படமா அமைஞ்சது “இசை”. பிரபல இசையமைப்பாளரா வெற்றி செல்வன் பல வருஷங்கள் வலம் வர, அவர்கிட்ட Musician-அ இருக்க சிவாக்கு ஒரு வாய்ப்பு வருது, அந்த வாய்ப்ப சரியா பயன்படுத்தி புது வித இசைய கொடுத்த சிவாக்கு மிகப்பெரிய வரவேற்பு தமிழ் சினிமால கிடைக்குது.
ரசிகர் பட்டாளங்கள் உருவாகுது. இதனால வெற்றி செல்வனுக்கு வாய்ப்பு குறையுது, சிவாக்கு செல்வாக்கு கூடுது. இதுல பொறாமை அதிகமான வெற்றி செல்வன், சிவா பாடல்கள கேக்குறத தவிர்க்குறாரு, சிவாக்கு போற வாய்ப்புகள தடுக்க நெனைக்குறாரு… இதான் கதை கரு.
ஆனா இதெல்லாம் தமிழ் சினிமால நாம கேட்ட மாதிரியே இருக்குனு நெனச்சீங்கனா, நீங்க நெனச்சது சரி தான். அதே அதே… வெற்றி செல்வனா நடிச்ச சத்யராஜ் நிஜமா அந்த கதாபாத்திரமா வாழ்ந்துருப்பாரு…. அதுவும் நான் தான்ற கர்வத்தோட நான் துப்புறதும் இசை தான்னு நடிச்சு காட்டுற சீன் தரமா இருக்கும்.
அதே போல எஸ்.ஜே.சூர்யா வர ஒவ்வொரு சீனும் அல்டிமேட், தன்ன சுத்தி என்ன நடக்குது, தான் யாரால பலி வாங்கப்படுறோம், கமிட் ஆன படங்களுக்கு இசையமைக்க முடியல, மனைவி கர்ப்பம் களையுது, இப்படி பல குழப்பங்கள் படத்துல வந்தாலும் படம் பாக்குற நமக்கு ரியல் லைப் கதாபாத்திரங்கள் கூட இணைச்சு பாக்க முடியும்.
ஆனா படத்துல கொஞ்சம் கற்பனை கலந்துருப்பாங்க.
சமீபத்துல வந்த ஒரு படத்துல நாம பாத்த Flashback Fake-னு சொன்னாங்க… ஆனா இசை படத்துல அது தான் பெரிய Twist-டே.
ஏன்னா நாம பாத்த மொத்த படமும் Fake, படம் பாத்தவங்களுக்கு புரியும், பாக்கலனா கண்டிப்பா பாருங்க.
கனவுல கூட இப்படி ஒரு Twist பாத்திருக்க மாட்டோம், நானே கிட்டத்தட்ட Clue குடுத்துட்டேன். இன்னைக்கு இசை படம் ரிலீஸ் ஆகி 9 வருஷம் ஆகுது, இப்பவும் இந்த படம் பாக்கும் போது, ஏன் எஸ்.ஜே.சூர்யா நடிச்சு வர எந்த படம் பாத்தாலும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவ மிஸ் பண்றோம்னு தோணுச்சு, சீக்கிரம் Direction-ல கம்பேக் கொடுங்க நடிப்பு அரக்கன்.