Cinema News Specials Stories

Come Back Soon… பிரசாந்த்!

இப்போவும் அந்த சத்தம் …!



எந்த சத்தம்?

அட அதான்ங்க எல்லா கல்யாண வீட்லயும், சோசியல் மீடியாலயும் “மலையூரு நாட்டமா மனச கண்டு பூட்டாம….” இந்த பாட்டோட சத்தம்… இதுவே சொல்லும், இப்போ கூட ACTOR பிரசாந்த் ட்ரெண்டிங்-ல தான் இருக்காருனு. 1990-கள்ல ரொம்ப FAMOUS ஆன SOUTH INDIAN ACTORS-ல பிரசாந்த்-ம் ஒருத்தர்.

நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜனோட பையன் தான் பிரசாந்த. இவரு தென்னிந்திய நடிகர் மட்டுமில்ல ஒரு நல்ல BUSSINESS MAN. தமிழ் படம் மட்டும் இல்லாம தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்கள்-லயும் நடிச்சருக்காரு.

17 வயசுல வைகாசி பொறந்தாச்சு-ன்ற படத்துல அறிமுகமானாரு. அப்படியே அவரோட சினிமா பயணம் தொடர்ந்து ஜீன்ஸ் படத்துல இவரோட STARDOM ஆரமிச்சு… அடுத்தடுத்து கண்ணெதிரேய் தோன்றினாய் (1998), காதல் கவிதை (1998), ஜோடி (1999), பார்த்தேன் ரைசித்தேன்(2000), பிரியாத வரம் வேண்டும் (2001)-னு தமிழ் சினிமால தனக்கான இடத்த பிடிச்சாரு.

Government of Tamilnadu இவருக்கு கலைமாமணி விருது குடுத்துருக்காங்க. சரியா 2007 ல இருந்து 2011 வர இவரோட படங்கள் வரவே இல்ல. இவரு BUSSINESS பக்கம் தன்னோட கவனத்த கொண்டு போனாரு. சென்னை திநகர்-ல 12 Floor-ல பிரம்மாண்டமான Jewellery Shop 2008-ல Open பண்ணாரு.

2011-ல இவரோட மலையூர் மம்பட்டியான் வந்துச்சு. அது இன்னும் நம்ம Playlist-அ Rule பண்ணிட்டு இருக்கு. அடுத்தும் அவர் படங்கள் பண்ணாரு, ஆனா அவருக்கான சரியான கதை கெடைக்கலன்னு நெனைக்கிறேன். நீங்க மறந்திருக்க மாட்டிங்க.

என்னதான்… எத்தனையோ COMBO இருந்தாலும்… வைகைப்புயல் பிரசாந் COMBO வேற லெவல்ல இருக்கும். வின்னர் படத்துல இருந்து அவங்க ஒண்ணா சேர்ந்தாலே பக்கா ENTERTAINMENT தான். அவரு மறுபடியும் ஒரு சூப்பரான கதைல COMEBACK குடுப்பார்னு எல்லாருமே எதிர்பாக்கிறோம். அந்தகன் படம் அந்த எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யும்னு வாழ்த்துவோம். WISHING YOU HAPPIEST BIRTHdAY PRASANTH.

Article By RJ Karthiha