தான் பண்ண தப்ப தன்னோட மகன் பண்ணக்கூடாதுனு ஒவ்வொரு அப்பாவும் உன்னிப்பா இருப்பாங்க. அப்படி தன்னோட பிள்ளையும் தப்பு பண்ண கூடாதுனு நினைச்ச யுவராஜ் சிங்-ஓட அப்பா, 16 வயசுல Skating-ல Medal வாங்கிட்டு சந்தோஷமா வந்த யுவ்ராஜ் சிங் கிட்ட இனிமே Skating-க்கு போக கூடாதுனு சொல்லி அந்த ஸ்கேட்டிங் Shoe-வையும் Medal-ஐயும் தூக்கி போட்டுடறாரு.
இதுக்கும் முதல்-ல சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்-னு நீங்க யோசிக்கலாம்; முழுசா கேளுங்க. கிரிக்கெட் விளையாட்டுல தான் நல்ல எதிர்காலம் இருக்கு அப்படினு கிரிக்கெட் கோச்சிங்-காக ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறாரு. அங்க ஒரு பிரபலமான கிரிக்கெட் பிளேயர் அடிக்கடி வர, அவரு கிட்ட தன் பையனோட கிரிக்கெட் எதிர்காலத்தை பற்றி கேட்க, “உங்க பையனுக்கு, கிரிக்கெட் சுத்தமா வராது-னு சொல்ல”, இந்த Negative-ஆன இடத்துல தன் பையன் இருக்கவேண்டாம்-னு முடிவு பண்ணி அவரே வீட்ல Training-ம் கொடுக்குறாரு.
பேட்டிங் சரியா பண்ணலனா அடிக்குறது, Bouncer Bll-அ வேகமா முகத்தை நோக்கி போடுறது, ஹெல்மெட் போடாம தான் பேட்டிங் பிடிக்கணும்-னு சொல்லுறது, சரியா விளையாடம போனா கெட்ட வார்த்தைகள்-ல திட்டுறது-னு ரொம்ப கடினமா நடந்துக்குறாரு. முக்கியமா அடிச்சி ஆட விருப்பமுள்ள நம்ம யுவராஜ் கிட்ட தரையோட ஆட சொல்லி வற்புறுத்துறது-னு இப்படியே போயிட்டு இருக்கு.
இதனால கடமைக்கேனு கிரிக்கெட் ஆட ஆரம்பிச்ச யுவராஜ் சிங்கிற்கு, தன்னோட அப்பா ஏன் இப்படி பண்ணுறாரு-னு புரிய வருது. அவரும் இந்திய கிரிக்கெட் டீம்-ல இடம் பிடித்து பெருசா வாய்ப்பு கிடைக்காம போனதாலயும், அந்த வாய்ப்பு போகாம இருக்க காரணம் அவர் அடிச்சு ஆட முயற்சி பண்ணி அதனால Out ஆனதும் தானு தெரிய வர, அதற்கு பிறகு அப்பா சொல்றதை Follow பண்ண யுவராஜ் சிங், ஆஸ்திரேலியா-க்கு எதிரான முதல் போட்டியில Brett Lee, McGratth போட்ட Bouncer-களை பறக்க விட்டாரு.
அவங்க கடின வார்த்தைகள் பேசினாலும் அது பெருசா Affect ஆகல. அவருடைய அப்பா கொடுத்த பயிற்சியின் பலன் இப்போதான் யுவராஜ்க்கு தெரிஞ்சுது. அதற்கு பிறகு The Rest is History-னு சொல்லுற மாதிரி என்ன ஆச்சு-னு உங்களுக்கே தெரியும். உலக சாம்பியன் யுவராஜ் சிங்-கிற்கு சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.