Cinema News Stories

தலைவர் 171 “கூலி”க்குள் இருக்கும் Nostalgic Reference என்னனு தெரியுமா?!

சன் Pictures தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். ஏனென்றால் தன்னுடைய Cinematic Universe-ல் கமல், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களை முந்தைய படங்களின் மூலம் இணைத்துள்ள லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படமும் மூலம் சூப்பர் ஸ்டாரையும் LCU-ல் இணைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் ’தலைவர் 171’ LCU-ல் இல்லை தனி திரைப்படம் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்து விட்டார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் காம்போவில் எது மாதிரியான படமாக தலைவர் 171 இருக்கும் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்கும் டைட்டில் டீஸர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Harbour-ல் தங்கம் கடத்தும் கும்பலுடன் சூப்பர் ஸ்டார் சண்டையிடுவது போல தனது பாணியில் டீஸர் வீடியோவை உருவாக்கிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். போதை பொருட்களை மையமாக வைத்து தன்னுடைய முந்தைய படங்களை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் தங்கத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ள தங்க கடத்தலை பற்றிய தலைவர் 171 படத்திற்கு “கூலி” என்று பெயரிட்டுள்ளனர்.

கூலி பட டைட்டில் டீஸரில் தனது ரங்கா படத்தில் இடம்பெற்ற “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்…” என்ற பிரபலமான வசனத்தை பேசியிருப்பார் ரஜினி. ரங்கா படத்தின் வசனம் பேசியிருந்தாலும் கூலி பட டீசரில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் தீ படத்தின் Reference அதிகமா இருக்கிறது.

1) தீ படத்தில் Horbour-ல் கூலியாக வேலை பார்த்த ரஜினிகாந்த் பின்னர் தங்கம் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மற்றொரு கும்பலிடம் இருந்தும் தங்கத்தை கடத்துவார்… கூலி டீஸரிலும் தங்கக் கடத்தல் கும்பலிடம் இருந்து தங்கத்தை கடத்துவதாகவே காட்சியமைக்கப்பட்டுள்ளது.

2) தீ படத்தில் அவருடைய கூலி பேட்ஜ் அணிந்திருப்பார் ஒரு சமயத்தில் அந்த பேட்ஜால் தான் உயிர் பிழைப்பார், அதேபோல ஒரு பேட்ஜ்-ஐ இப்போது வெளிவந்துள்ள கூலி டீஸரிலும் அணிந்துள்ளார்.

3) தீ படத்தில் தங்கத்தை கடத்த தனியாக மோட்டார் சைக்கிளில் துறைமுகத்திற்கு செல்வார், கூலியிலும் துறைமுகத்திற்குள் மோட்டார் சைக்கிளில் வருவது போன்ற சத்தம் இருக்கும்.

4) இரண்டு படங்களிலும் ஹார்பர் குடோனில் தான் சண்டை காட்சி இருக்கும்.

இரண்டு படங்களுக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கும் நிலையில் விக்ரம் படத்தை போல தீ படத்தின் Spin Off ஆக கூலி படம் இருக்குமா இல்லை ரஜினிக்காக Nostalgic Reference-களை லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளாரா என்பது போகப்போக தான் தெரியும்.

Article By Sathishkumar Manogaran