Specials Stories

மேற்கு தொடர்ச்சி மலை – 2 ஆண்டுகள் கொண்டாட்டம் !!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படத்தின் எளிமையான கதாபாத்திரங்களும் தத்ரூபமான கதைக்கருவும் மக்கள் வரவேற்கும் விதத்தில் அமைந்தது.

இயக்குனர் லெனின் பாரதியின் திரைக்கதை அமைப்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வை அழகாக எடுத்துக் காட்டியிருந்தது. இப்படத்தில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, அபு வலையன்குளம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பர்.

ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்த்தபடி எப்படியாவது ஒரு சொந்த நிலம் வாங்க வேண்டும் எனும் ஆசையுடன் போராடும் ரங்கசாமி எனும் ஆண்டனியின் கதாபாத்திரத்தின் முயற்சிகளே இப்படத்தின் கதை சுருக்கம்.

ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய லெனின் பாரதி அவர்கள் இயக்கிய முதல் படம் மேற்கு தொடர்ச்சி மலை. இப்படம் கேரளாவில் நடைபெற்ற 21 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தயாரித்ததற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் வந்து குவிந்தது.

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒப்பந்தம் ஆகிய 1001-வது  திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானியின் பின்னணி இசை இந்த கதைக்கு உயிர் ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக திரையில் காட்டி இருக்கும்.

இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் விஜய் சேதுபதி அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரோடக்ஷன்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி புரோடக்ஷன்ஸ் வெளியிட்ட போஸ்டர் பதிவை கீழே காணுங்கள்.