Cinema News Stories

Vidaamuyarchi Review: விடாமுயற்சி – சாத்தியமில்லாத காட்சி நிறைந்த சாதாரண கதை…

vidaamuyarchi
vidaamuyarchi

Vidaamuyarchi Review: விடாமுயற்சி – சாத்தியமில்லாத காட்சி நிறைந்த சாதாரண கதை… 2025 ஆம் ஆண்டு பிப் 6ல் உலகமெங்கும் வெளியாகும் ‘பத்ம பூஷன்’ அஜித் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் விமர்சனம் இங்கு உள்ளது.

விடாமுயற்சி

‘பத்ம பூஷன்’ அஜித் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம், விடாமுயற்சி. இப்படமானது 2025 பிப் 06ல் உலகமெங்கும் வெளியாகும் அதிரடி – திரில்லர் திரைப்படமாகும்.

இப்படத்தில் அஜித் நாயகனாக நடிக்க திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பல தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, தமிழ் திரைப்பட முக்கிய தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா புரொடக்சன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

vidaamuyarchi
vidaamuyarchi

விடாமுயற்சி கதை

விடாமுயற்சி திரைபடத்தின் கதையானது ஒரு நாளில் நடக்கும் சஸ்பென்ஸ் திரைக்கதை ஆகும். நெடுஞ்சாலையில் தனது மனைவியை கடத்தி சென்ற கும்பலை தேடும் நாயகனின் கதை. இதில் மூன்று காலகட்டங்களில் இந்த படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.

நாயகன் – நாயகி இடையே இருக்கும் காதல் காட்சிகள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் ஒவ்வொன்றும் பலரை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மெதுவாக நகரும் திரைக்கதையில் ஒவ்வொரு பத்து நிமிடம் இடையே விறுவிறுப்பான காட்சிகளும், கதைக்கு ஏற்றவாறு இப்படத்தில் சண்டை காட்சிகளும், எமோஷனல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

vidaamuyarchi
vidaamuyarchi

மேக்கிங் & டைரக்டிங்கில் ஹாலிவுட் ஸ்டைலில் விடாமுயற்சி படம் இருக்கின்றன, கடந்த காலத்தில் நடந்த குழப்பங்களை மீண்டும் எழுத முயற்சிக்கும் ஒரு நபரைச் சுற்றி வரும் கதை மற்றும் அவரது செயல்கள் மூலம் அதை சரிசெய்ய முயற்சிக்கும் நாயகன், இடையில் அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து பல இடையூறுகளை எதிர்கொள்கிறார்.

ரீமேக்

விடாமுயற்சி திரைப்படமானது ஹாலிவுட் சினிமாவில் வெளியான ‘Breakdown’ படத்தின் கதை சாயலில் உருவாகியுள்ள படமாகும். இதற்காக இப்படத்தின் ரீமேக் உரிமையை ‘Paramount Pictures’ நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளனர், படக்குழுவினர். மேலும் விடாமுயற்சி படத்தினை Overseas விநியோக உரிமையை Paramount Pictures பெற்று உலகமெங்கும் இப்படத்தினை விநியோகம் செய்கிறது.

vidaamuyarchi
vidaamuyarchi

சர்வைவல் த்ரில்லர்

விடாமுயற்சி திரைப்படம் தமிழ் சினிமாவில் சர்வைவல் த்ரில்லர் படமாக மட்டுமில்லாமல் ஒரு ஜனரஞ்சகமான படமாகவும் இருக்கும். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகள் நேர்த்தியான காட்சிகள் கொண்டு ரசிகர்களுக்கு எந்த ஒரு இடங்களிலும் சோர்வு அடைய விடாமல் விறுவிறுப்பு நிறைந்த படமாக கண்டிப்பா இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி பல நேர்கானலில் கூறி வருகிறார்.

vidaamuyarchi
vidaamuyarchi

About the author

Sakthi Harinath