ஸ்ரீலீலா முதல் கயாடு லோஹர்: 2025ல் தமிழ் சினிமாவின் புதுமுக நடிகைகள் – முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் 2025ல் அறிமுகமாகியுள்ள மற்றும் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளின் லிஸ்ட் உள்ளது. இதில் பிற மொழி திரைப்படங்களில் நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள நடிகைகள் மட்டுமே உள்ளனர். இந்த பட்டியலில் க்ரித்தி ஷெட்டி, ஸ்ரீலீலா, கயாடு லோஹர் போன்ற முக்கிய நடிகைகள் மட்டுமே உள்ளனர். முழு தகவல்கள் இதோ.
ஸ்ரீலீலா

ஸ்ரீலீலா – தெலுங்கு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலமானவர். இவருக்கென பெரிய அளவில் ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் தமிழ் சினிமாவில் 2025ல் சிவகார்த்திகேயன் நடிக்கும், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பராசக்தி திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் தற்போது அறிமுகமாகியுள்ளார்.
ருக்மணி வசந்த்

ருக்மணி வசந்த் – கன்னட திரைப்பட நடிகை. இவர் ‘Sapta Saagaradaache Ello – Side A’ என்ற கன்னட சினிமா நடிகர் ரக்ஷித் ஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டவர். மிக குறைந்த திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவரது திரைப்பயணம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது இவர் தமிழ் சினிமாவில் 2025-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிக்கும் ‘எஸ்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு இவர் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர் படத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமாகியுள்ளார்.
கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி – தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகை. இவர் உப்பெனா படத்தில் நடித்து பெரிய அளவில் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். தற்போது இந்த 2025 ஆம் ஆண்டு, நடிகை கீர்த்தி ஷெட்டி வா வாத்தியார், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மற்றும் ஜீனி ஆகிய 3 படங்களில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
கயாடு லோஹர்

கயாடு லோஹர் – 2025ல் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த டிராகன் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார், கயாடு லோஹர். இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி இந்த ஆண்டின் முக்கிய பிரபலங்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் பல தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சான்வே மேகன்னா

சான்வே மேகன்னா – 2025ல் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார், சான்வே மேகன்னா. இவர் மாடலிங் துறையில் பணியாற்றி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இப்படம் தான் இவரது சினிமா பயணத்தின் முதல் படமே. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பலர் மத்தியில் பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளது.