இந்த வாரம் (ஜூன் 20, 2025)ல் தமிழில் ரிலீஸாகும் திரைப்படங்கள் – ஜூன் 20, 2025ல் தமிழ் சினிமா திரையரங்குகளில் தமிழ் வெளியாகும் படங்களின் முழு லிஸ்ட் இங்கு உள்ளது. இதில் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடித்திருக்கும் ‘குபேரா’, சென்னை சிட்டி கேங்ஸ்டர், DNA மற்றும் சிட்டாரே சமீன் பர் என இந்த வாரம் தமிழில் வெளியாகும் படங்களின் முழு லிஸ்ட் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளது.
குபேரா

தமிழ் சினிமா நடிகர் தனுஷ் மற்றும் தெலுங்கு திரையுலக ஜாம்பவான் நாகர்ஜுனா இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம், குபேரா. இப்படத்தினை இயக்குனர் சேகர் கம்முலா இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஷ்மிகா, ஹரீஷ் பேரிடி, ஷாஜி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் 2025 ஜூன் 20-ல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இருமொழி படமாக உருவாகி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
சென்னை சிட்டி கேங்ஸ்டர்

வைபவ், அதுல்யா ரவி, ஜான் விஜய், ஆனந்தராஜ் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி – நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்க, இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் இணைந்து இயக்கியுள்ளனர். திருட்டு மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் 2025 ஜூன் 20ல் வெளியாக திட்டமிட்டுள்ளது.
DNA

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிரைம் – திரில்லர் மற்றும் காதல் திரைப்படம். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன் என தமிழ் சினிமா முக்கிய நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் 2025 ஜூன் 20ல் தமிழ் சினிமாவில் வெளியாக காத்திருக்கிறது.
சித்தாரே ஜமீன் பர்

பாலிவுட் நடிகர் அமீர் கான், ஜெனிலியா நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படம், சித்தாரே ஜமீன் பர். இப்படம் ஹிந்தி மொழியில் உருவாகி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் உலகமுழுவதும் ஜூன் 20, 2025ல் வெளியாகிறது.