Cinema News Stories

நடிகர் சூர்யா நடித்த ‘ஏ’ சான்றிதழ் படங்கள் பற்றி தெரியுமா?

Suriya A certified Movies List in Tamil
Suriya A certified Movies List in Tamil

தமிழில் நடிகர் சூர்யா நடித்த ‘ஏ’ சான்றிதழ் படங்கள் பற்றி தெரியுமா? – முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா நடித்துள்ள ‘ஏ’ திரைப்படங்களின் பட்டியல் உள்ளது. இதில் ஜெய் பீம், நந்தா என பல இவர் நடித்துள்ள ‘ஏ’ படங்களின் லிஸ்ட் முழுவதும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதோ.


நந்தா

நந்தா, இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படம் எதார்த்த சினிமா படைப்பு என்ற பெயரில் பல காட்சிகள் மற்றும் அழுத்தமான வசனங்களை நேரடியாக காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு முகம் சுளிக்க வைத்த காரணத்தால் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சூர்யா திரைப்பயணத்தில் இவரை தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் முக்கிய நடிகராக உயர்த்திய படமாகும்.

Suriya A certified Movies List in Tamil
Suriya A certified Movies List in Tamil

பிதாமகன்

பிதாமகன், இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் & சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட சூப்பர் ஹிட் படம் என்ற பெருமை அடைந்தது. இப்படத்தில் நடிகர் சூர்யா இரண்டாம் கட்ட நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு இப்படத்திற்காக பல விருதுகள் அளிக்கப்பட்டது. மேலும் சூர்யா இப்படத்திற்காக தான் தனது முதல் பிரத்யேக விருதினை வென்றுள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகளுக்காக தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

Suriya A certified Movies List in Tamil
Suriya A certified Movies List in Tamil

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து, மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா – மாதவன் – சித்தார்த் என மூன்று கதாநாயகர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அரசியல் திரைப்படம். இப்படத்தில் மக்களுக்கு பல அரசியல் உண்மைகள் மற்றும் ஆபத்துகளை வசனங்கள் மற்றும் காட்சிகளில் வெளிப்படையாக கூறிய காரணத்திற்காக இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Suriya A certified Movies List in Tamil
Suriya A certified Movies List in Tamil

ஆறு

ஆறு, இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற அதிரடி திரைப்படம். அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள் இடம்பெற்ற காரணத்தால் ஆறு திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டது.

Suriya A certified Movies List in Tamil
Suriya A certified Movies List in Tamil

ரத்த சரித்திரம்

ரத்த சரித்திரம், ஆந்திரா மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவ கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான், ரத்த சரித்திரம். இப்படத்தில் சூர்யா & விவேக் ஓபராய் நாயகனாக நடிக்க இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். அதிக வன்முறை காட்சிகள் நிறைந்த காரணத்திற்காக இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Suriya A certified Movies List in Tamil
Suriya A certified Movies List in Tamil

ஜெய் பீம்

ஜெய் பீம், இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் மற்றும் லிஜிமோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படம் நேரடி ஓடிடி படமாக தமிழ் சினிமாவில் வெளியானது, ஆனால் இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. வன்முறை காட்சிகள் மற்றும் அழுத்தமான வசனங்கள் காரணங்களுக்காக இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டது என தகவல்கள் வெளியானது.

Suriya A certified Movies List in Tamil
Suriya A certified Movies List in Tamil