தினமும் இந்த 10 மோட்டிவேஷன் தமிழ் பாட்டை கேளுங்க.. தமிழ் சினிமா-ல வெளியான பல பாடல்கள்-ல இந்த ஒரு 10 மோட்டிவேஷன் பாட்டை கேட்ட அந்த நாளே செம vibeஆ இருக்கும். அப்படி பட்ட சில மோட்டிவேஷன் தமிழ் பட பாடல்கள் சில இந்த பட்டியல்-ல இருக்கு. இதோ.
1) 1st எனக்கு Motivation நெறைய தேவைப்படுது அப்பிடி ஒரு song oda தான் Dayவ Start பண்ணணும்னு நினைசீங்கனா!! மனிதன் படத்துல வர முன் செல்லடா முன்னே செல்லடா பாட்ட கேளுங்க அதுலையும் குறிப்பா இந்த வரி தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான் கண்டிப்பா உங்கள ஒரு புது முயற்சிய எடுக்க வைக்கும்.
2) அடுத்து வாழ்க்கை பலரால ஏமாந்துட்டேன் அவங்க முன்னாடி ஜெய்ச்சு காட்டணும்னா படையப்பா படத்துல வர வெற்றிக்கொடிகட்டு பாட்ட கேளுங்க ஒரு புது சக்திய உங்களுக்கு கொடுக்கும்… முக்கியமா இந்த வரி வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா இதை கேட்டுட்டே எந்த ஒரு வேலை பண்ணாலும் அதை சீக்கிரம் முடிக்கலாம்.
3) எனக்கு காலைலேயே கொஞ்சம் Vibeபும் வேணும் , Motivationணும் வேணும்னா அழகிய தமிழ் மகன் படத்துல வர எல்லா புகழும் இறைவன் ஒருனுக்கே Songக கேளுங்க வெற மாறி energy ஆகிருவீங்க அதுலையும் இந்த வரி….
*நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே * இத கேட்டா நம்ம பிரச்சனைக்கெல்லாம் அர்ச்சனைய போட்டுரலாம்..
4)அடுத்து இன்னைக்கு ஒரு புடி ,சீக்கிரம் இந்த வேலையெல்லாம் முடி ,என் மெனஜருக்கு இருக்கு ஒரு அடினு ….
ஒரு Taskக சீக்கிரம் முடிக்கனும்ன்ற energy காலைலயே வேணும்னா விடாமுயற்சி படுத்துல வர பத்திக்கிச்சு ஒரு ராட்சஸ திரி பாட்ட கேளுங்க… நமக்கு high energy கொடுக்க வரும் பாருங்க ஒரு வரி
ரத்தம் ஓரு சொட்டு மிச்சம் இருந்தாலும் கதை இன்னும் முடியல தொடருது பாரு என்னைக்கும் விடாமுயற்சி நம்பிக்கை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அடைஞ்ச feelல morning eh இந்த பாட்டு தரும்.
5) அடுத்து பிரியாணி படத்துல வர எதிர்த்து நில் பாட்டு வரும்னு நினைசீங்கனா…. அதான் நீங்களே நினைச்சிட்டீங்க வேண்டாம் ஆனா அதே யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்ல சரோஜா படத்துல வர நிமிர்ந்து நில் பாட்ட கேளுங்க இந்த வரி மைண்டல் ஓடிட்டே இருக்கும் நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம்
6) எனக்கு இதெல்லாம் வேண்டாம் எழுந்ததும் ஆட்டம் போட்டாலே நான் energy ஆகிருவேன்னா
நீங்க கேக்க வேண்டியது brush பண்ணிட்டே ஆட !மாஸ்டர் படத்துல வர வாத்தி coming…
என்ன இந்த பாட்டுல இருக்க ஒரே பிரச்சனை கேக்க ஆரம்பிச்சா 3:30நிமிஷ பாட்டு மூணு தடவை continueவ கேப்போம்.
7) இதே Vibeல உங்க energyய increase பண்ண 90s Kids oda Vaathi coming பாட்டான புதுப்பேட்டை வரியா song !
வரியா வரியா தாண்டி பெருசா வரி இல்லைனாலும் காலைல கேட்டா தனி vibeஇருக்கும்
8) இந்த flavourலையே நல்ல Lyricsம், beatம் சேர்ந்து brush பண்ணக்கூட நாம மறுந்து ஆடுற மாதிரி Sachin படத்துல வரும் பாருங்க வாடி வாடி song நான் அவுத்து வுடும் பாட்டுல… பல விசுலு சத்தம் நாட்டுல… புரியாத ராகமெல்லாம் தேவயில்ல… அட கேளு கேளு இது கானா பாட்டு… நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
நான்லாம் வேலை கிடைக்குது வேலை ,போட்றா ஒரு Danceசனு தோசை சுடுற மம்மியோட சேர்ந்து ஒரு ஆட்டம் போடுவேன் அப்பறம் அவங்க தோசை கரண்டியால ஒன்னு போடுவாங்க அது வழி வேற department.
9) அடுத்து morning.. work oh,college oh poga Driving or Travelல இருக்கீங்கனா KGF படத்துல வர தீரா தீரா song கேளுங்க உங்க engery 100 இல்ல 1000% increase ஆகும். அந்த speedல சாங் போகும்னு இந்த வரி வரும்போது
மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா life ல பெருசா ஏதாச்சும் சாதிக்கணும்னு தோணும்.
10) கடைசியா இந்த ஒரு பாட்ட எதிர்பார்த்திருக்க மாட்டீங்க காலைல ஒரு Maja Vibeல Mass energyயா உங்கள வச்சுக்க அஞ்சாதே படத்துல வர கத்தால கண்ணால பாட்ட கேளுங்க…
இதுல மோட்டிவேஷன் கொடுக்க எதுவும் இல்ல ஆனா Mind eh fresh ஆக்குற music இருக்கு.

