இந்த காலத்துல வண்டி இல்லாத வீட பாக்கவே முடியல. இப்போல ஒரு வீட்டுக்கு ஒரு கார்-னு பெரும்பாலும் எல்லாரு கார் வச்சுருக்காங்க.. ஆனா தலைக்கு ஒரு பைக்-னு வீட்ல இருக்கிற ஒவ்வொருத்தரும் அவங்க ரசனை-க்கு ஏத்தபடி பைக் வச்சுருக்காங்க.. இது நல்லதா? நாம சம்பாரிக்கிற பணத்தை மிச்சம் பண்ண பல வழிகள்-ல யோசிக்கிற நம்மளால பெட்ரோல் / டீசல் போன்ற செலவுகளை கட்டுப்படுத்த முடியாம அத ஒரு அத்யாவசிய செலவா பாக்க ஆரம்பிச்சுட்டோம். நீங்க வண்டி ஓட்டுறதால தினமும் எத்தனை ரூபாய் வீணா செலவா ஆகுதுனு தெரியுமா? ஒரு நாளைக்கு fuel செலவு கொஞ்சமா தெரிஞ்சாலும் மாசம் கடைசில கணக்கிட்டா பெட்ரோல் / டீசல்-கு மட்டுமே பெரிய அமௌன்ட்-ஆ வருது-னு பீல் பண்றீங்களா? கவலைய விடுங்க.. இந்த 10 சிம்பிள் tricks-அ follow செஞ்சு effective-அ எப்படி fuel save பண்ணலாம்-னு கத்துக்கோங்க..
- முதல் விஷயமே உங்க வேகத்தை சரியானு பாருங்க. உங்க வண்டிய சரியான வேகத்தில ஓட்டனும். ஒவ்வொரு வண்டியும் ஒவ்வொரு model. 80 KM/Hr வேகமா போகக்கூடிய வண்டி, அளவான CC அம்சங்கள் கொண்டது. இது பெரும்பாலும் மெயிலேஜ்-க்கு முக்கியத்துவம் கொண்ட மாடல். இது போன்ற வண்டிகள வச்சுக்கிட்டு speed போக கூடாது. இதனால வண்டி என்ஜின் அதிகமா சூடாகும். என்ஜின் சூடாச்சுனா பெட்ரோல் ரொம்ப செலவாகும்.
- நிதானம் முக்கியம் பிகில்-லு… முக்கியமா டிராபிக் ரோடு-ல மெதுவா ஓட்டுங்க. வேகத்துக்கு no சொல்லுங்க. குறைந்த தூரத்துக்கு ஸ்பீட்-ஆ accelerator-ஆ முறுக்கி அப்புறம் சடன்-அ பிரேக் போடக்கூடாது. நீங்க accelerator முறுக்கும் பொது கணிசமான பெட்ரோல் என்ஜின்-கு போய்டும், அப்புறம் நீங்க பிரேக் போன்ற-னால என்ஜின்-கு போன எல்லா பெட்ரோலும் வேஸ்ட் ஆகிரும். மெதுவா ஓட்டுங்க, மெதுவா பிரேக் போடுங்க..
- டயர் பிரஷர் சரியா வைங்க.. உங்க வண்டிக்கு இருக்கக்கூடிய பிரத்யேக Pressure என்னானு தெரிஞ்சுக்கிட்டு அடிக்கடி சரியா manage பண்ணுங்க.. டயர்ல கம்மியான Air இருந்தா ரோலிங் ரெஸிஸ்டன்ஸ் அதிகமா இருக்கும். அதனால engine-க்கு அதிக effect வேணும். இதுக்கு பதிலா அடிக்கடி Air சரியா இருக்கா-ணு பாக்கணும். நீங்க பெட்ரோல் போடுற இடங்கள்-ல Air check பண்ண free கிட்ஸ் available-ஆ இருக்கும். அத யூஸ் பண்ணிக்கோங்க.
- அளவுக்கு அதிகமா ஜாஸ்தி Weight வச்சு Travel பண்ணாதீங்க… உங்க வண்டி-ல weight கூட கூட fuel consumption அதிகம் ஆகும்.
- எஞ்சின் ஐடிலிங்-ல கவனமா இருங்க.. உங்க travel முடுஞ்சதும் சும்மா வண்டியா ஸ்டார்ட் பண்ணி வச்சுக்கிட்டு இருக்காம என்ஜின்-அ off பண்ணுங்க. ஐடிலா ஒரு 5 நிமிஷம் நிக்கரது கூட fuel தேவையில்லாம செலவு ஆகும்.
- சரியான கியர்-ல ஓட்டுங்க. Low gear-ல வேகமா ஓட்டுறது, Fuel கடி கடினு வெளிய போற மாதிரி தான். Road condition-க்கு set ஆகுற மாதிரி gear வச்சா, engine எளிமையா வேலை செய்யும்.
- முறையான எஞ்சின் சர்வீஸ்.. எஞ்சின் ஆயிலா, ஏர் ஃபில்டர்-ஆ – எல்லாத்தையும் சரியா பராமரிச்சா தான் மெயிலேஜ் நல்லா வரும். நீங்க சீர்வீஸ் மிஸ் பண்ணினா, mileage கணக்கே மாறும். Mechanic service, oil change, filter cleaning -னு என்ஜின்க்கு தேவையான விஷயங்களை முறையா தவறாம நல்ல மெக்கானிக் வச்சு பண்ணுங்க.
- கார்-ல AC போடுறதுல கவனம் முக்கியம். ஒரு city -ல டிராபிக்-ல இருக்கும் போது AC போடுறது தேவையான விஷயம் தான். ஆனா வண்டி Move ஆனதும் AC ஆப் பண்றது fuel consumtion-ஆ குறைக்கும். fuel burn-ல தான் AC ஒர்க் ஆகுது. அதிகமா AC யூஸ் பண்ணாம, windows திறந்து வண்டி ஓட்டுங்க..
- Apps & Tech-ஆ சரியா உபயோக படுத்தி வண்டி ஓட்டுங்க.. Navigation apps, traffic avoiders, eco-driving tools-னு சில முக்கிய Apps எல்லாம் try பண்ணுங்க.. Google Maps-ல traffic இல்லாம right route-ல, real-time traffic alerts-ல போறது கூட ஒரு Saving தான்.
- எல்லா இடத்துக்கும் bike/car-ல போறதுக்கு பதிலா சில சமயங்கல்-ல bus, metro, train use பண்ணா நல்லா சேமிக்க முடியும்.
இப்போ நாம பாத்த இந்த 10 tricks ரொம்ப சிம்பிள்-ஆ இருந்தாலும் இது பெரிய அளவிலா உங்களுக்கு உங்க fuel save பண்றதுல effective-ஆ இருக்கும். இத தினமும் follow பண்றனால மாசத்துக்கு பெரிய அளவில நீங்க fuel சேமிச்சு மிச்சம் பண்ணலாம்..
Article By Sakthi Harinath

