Specials Stories

தனுஷ்: தடை அதை உடை புது சரித்திரம் படை…

Dhanush Cinema Journey Summary in Tamil | தனுஷ்: தடை அதை உடை புது சரித்திரம் படை
Dhanush Cinema Journey Summary in Tamil | தனுஷ்: தடை அதை உடை புது சரித்திரம் படை

சினிமாவைப் பற்றி பேசும்போது, சில பேர் வரலாறே மாதிரி தோன்றுவாங்க. அந்த மாதிரி ஒரு பெயர் – தனுஷ். “என்ன இப்படி மெலிஞ்சு போயிருக்கான் பையன்!”, “முகத்துல அப்படி ஒன்னும் பெருசா கலை இல்லையே”, “Actor மாதிரியே தெரியலையே!”னு பலர் சிறுமைபடுத்தி சொன்னாலும்… அந்த பையனோட கனவு பெருசா இருந்துது.

அவர்தான் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்கிற தனுஷ். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சு chef ஆகணும்னு ஆசை பட்ட ஒரு பையன், ஆனா குடும்பமே சினிமா குடும்பம் என்றதால, அந்த வழி போகாம, சினிமா குள்ள நுழையறான். 2002 ல துள்ளுவதோ இளமை ரிலீஸ் ஆகுது – இதுதான் அறிமுக படம். படம் ஓகே ஆனா, பையன பார்த்து ஒரு கேள்வி – “இவன் லாம் ஹீரோவா? “காரணம் நம்ம மக்களுக்கு ஹீரோனா, தளபதி படத்துல வர அரவிந்த் ஸ்வாமி மாதிரி தான் இருக்கணும்னு ஒரு பின்பம் இருந்துச்சு.

படத்தை பற்றி பாராட்டுகள் வந்ததோடே விமர்சனங்கள் எகச்சக்கமா… இப்படியான சுழ்நிலையில தனுஷோட வாழ்க்கைய மாத்தினது அண்ணன் செல்வராகவன். 2003 ல தனுஷ் ஹீரோவா வைத்து காதல் கொண்டேன் எடுத்தாரு,
இது வரைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்ததிலேயே ஒரு வித்தியாசமான காதல் கதை.

Dhanush Cinema Journey Summary in Tamil | தனுஷ்: தடை அதை உடை புது சரித்திரம் படை
Dhanush Cinema Journey Summary in Tamil | தனுஷ்: தடை அதை உடை புது சரித்திரம் படை

தனுஷ் ஏளனமா பார்த்தவங்க எல்லாம், “பையன் நல்லா நடிக்கிறானே !” னு பாராட்டத் துவங்கினாங்க. ஆனாலும் உருவ கேலி குறைந்ததா? இல்ல… இதுக்கப்பறம் நடிச்ச திருட திருடி மூலமா தன்னக்குள்ள இருக்குற fun side அ audience கிட்ட காட்டினார். அதுக்கப்பறம் புதுப்பேட்டை – இன்றைக்கும் பேசப்படுற ஒரு படம் . இப்ப எடுக்கிற காங்ஸ்டர் படங்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரி.

அதுக்கப்பறம் நடிச்ச பொல்லாதவன் , யாரடி நீ மோஹினி -னு மாஸ்,ரொமான்ஸ் ,பேமிலி எமோஷன்ஸ்-அ காமிக்குற படங்கள்ல நடிச்சு, தமிழ் ரசிகர்களின் மத்தியில தனக்கென தனி இடம் பிடிச்சாரு. இதுக்கப்பறம் 2011 ஆம் ஆண்டு தனுஷ்க்கு மிகச் சிறப்பா அமைஞ்சுது. தொட்டதெல்லாம் தங்கம்-ன்ற மாதிரி, ஆடுகளம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார். அதோடே அவரு எழுதி பாடிய Why This Kolaveri Di பாட்டு, உலகம் full ட்ரெண்டிங் ஆகி, தனுஷ் அ அடுத்த லெவெல்க்கு கொண்டு போச்சு.

2013 ல பாலிவுட் அறிமுகம்– ரான்ஜஹானா படம் மூலமா. இப்ப வடஇந்தியர்களும் இவரு பேன். ஒரே படத்துலயே பல பேரோட பாராட்டு பெற்றாரு.Filmfare அவார்ட் உம் கிடைச்சது. இதுக்கப்றம் தமிழ்ல நடிச்ச வேலைஇல்லாபட்டதாரி, மயக்கம் என்ன, மரியான்,மாறி ,வடசென்னை, அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம்-னு எல்லா படங்களையும் தன்னோட இயல்பான நடிப்பால தமிழ் சினிமா ரசிகர்கள் “நடிப்பு அரக்கன்” -னு கூப்பிடுற அளவுக்கு உயர்ந்தாரு.

நடிப்புல மட்டும் இல்லாம, direction- லயும் கலக்கினாரு தனுஷ். Powerpaandii ல ஆரம்பிச்சு, இப்ப ரிலீஸ்க்கு ரெடியா இருக்குற இட்லிகடை வரைக்கும் கடுமையா உழைச்சு, உழைப்புக்கு முன்மாதிரியா இருக்கராரு.இவரு எழுதின பாடல்கள் அனைத்தும் தமிழ் சினிமால சூப்பர் ஹிட். இந்திய திரைபடங்களை தாண்டி, ஹாலிவுட்ல இருந்து கூட இவரை நடிக்க வைக்க அழைப்புகள் வந்துருக்குது. The Extraordinary Journey of the Fakir, The Gray Man படம் மூலமா தன்னோட திறமையை நிரூபிச்சு, இப்ப உலகம் போற்றுற நடிகராக உயர்ந்திருக்காரு.

எவ்வளவு உயரங்கள் போனாலும் , கிரௌண்டெட்டா,எவ்வளவு விமர்சனங்களை face பண்ணாலும் தன்னம்பிக்கையால எல்லாத்தையுமே தாங்கிக்கிட்டு வரரு தனுஷ். அவர், ரசிகர்களுக்கு மட்டும் இல்லாம, நம்மல்ல பலருக்கும் ஒரு INSPIRATION!

Article By RJ Kamal