Specials Stories

சித்திரை சிறப்புகள்

Tamil New Year - சித்திரை சிறப்புகள்
Tamil New Year - சித்திரை சிறப்புகள்

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மதத்திற்கும் நிறைய சிறப்புகள் உள்ளது ,அதில் சித்திரை மேலும் சிறப்பானது ஏனெனில் இந்த சித்திரை விழாக்கள் நிறைந்த மாதம்.

முக்கனிகளான மா,பாலா ,வாழை வைத்து வழிபடுவது சித்திரையில் சிறப்பானதாக சொல்லப்படுகிறது , இந்த முக்கனிகள் செழிப்பு ,இனிமை மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமா இருப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் கனிகளை கொண்டு வழிபாடும் வழக்கம் நம் மரபில் உள்ளது ,

சித்திரா பவுர்ணமி இந்த மாதத்தின் சிறப்புகளில் ஒன்று ,தமிழின் முதல் வருடமான சித்திரையில் வரும் முதல் முழு நிலவு தினம் சித்திரா பவுர்ணமியா கொண்டாட படுகிறது ,பெரும்பபாலும் இந்த நாளில் பெண்கள் விரதம் இருப்பதும் கிரிவலம் போன்று ஆன்மிக வழிபாட்டிற்கும் சிறப்புக்குரிய நாள் மேலும் இந்த நாளில் எலுமிச்சை சாதம் ,தயிர் சாதம் தானமாக கொடுப்பதால் நன்மைகள் கிடைக்கும்னு நம்பப்படுகிறது

இந்த சித்திரையில் மதுரையில் நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ,கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுன்னு எல்லாமே உலக புகழ் பெற்றவை ,லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வுகளை காண மதுரைக்கு வருவார்கள் ,மதுரை மட்டுமின்றி, தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் பல அம்மன் மற்றும் பெருமாள் கோயில்களில் கொடியேற்றத்துடன் விழாக்கள் சிறப்பாக நடைபெறும்

சித்திரை மாதம் புதிய தொடக்கத்திற்கு உகந்த மாதமாக நம்பப்படுகிறது ,இந்த மாதத்தில் வரும் அக்ஷய திரிதியை நாளில் வாக்கும் புதிய பொருட்கள் நமக்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது ,இந்த மாதம் புதிய வீடு கட்ட தொடங்கவும் வாஸ்து பூஜை செய்யவும் ஏற்ற மாதமாக நம்பப்படுகிறது.

Article By – Saravanan (Producer & RJ Erode)