இசைன்னா என்ன? சில பேருக்கு அது background sound. ஆனா சில குரல்கள் மட்டும் headphones போட்ட உடனே “dei… life ah feel பண்ணணும் போல”ன்னு தோண வைக்கும். அந்த categoryல top la இருப்பவர் தான் Sid Sriram. தமிழ் சினிமால கடந்த சில வருடங்களாக காதல், breakup, late night drive, rain vibe, insta reel எதுல பார்த்தாலும் Sid Sriram voice இல்லாம இருக்காது. அந்த அளவுக்கு youth playlistல permanent place பிடிச்சிருக்கார்.
அவரோட voiceல ஒரு uniqueness இருக்கு. அது perfect-aa polished-aa இருக்காது. ஆனா அதுதான் அவரோட magic. அவர் ஒரு line பாடும்போதுக்கூட “இந்த மனிதன் உண்மையாவே feel பண்ணி பாடுறாரு போல”ன்னு தோணும். அதனால காதல் பண்ணுறவங்க repeat la கேட்பாங்க, breakup ஆனவங்க emotional ஆகிடுவாங்க, singles கூட “நமக்கும் ஒருநாள் love வரும்”ன்னு feel பண்ணுவாங்க.

Sid Sriram அமெரிக்கால born & brought up. ஆனா தமிழ் pronunciation கேட்கும்போது நாமே confuse ஆகிடுவோம். Carnatic music background இருந்ததால அவர் பாடுற songsல ஒரு soulful touch இருக்கும். அதனால melody songs மட்டும் இல்லாமல் mass songs கூட semma unique ah இருக்கும். இப்போ எந்த music director album எடுத்தாலும் “ஒரு Sid song இருந்தா போதும்”ன்னு நினைக்கிற அளவுக்கு அவர் voice ஒரு separate hype create பண்ணிடுச்சு.
“Adiye…”, “Maruvaarthai…”, “Kannaana Kanney…”, “Nee Singam Dhan…” மாதிரி songs எல்லாம் வெறும் பாடல்கள் இல்ல, பல பேரோட memories. Sid Sriram songsக்கு memes கூட வேற level. High pitch வந்தா “speaker test ah?”ன்னு troll பண்ணுவாங்க. ஆனா அதே மக்கள் தான் night 2 மணிக்கு அந்த songs repeat la கேட்டு feel பண்ணிக்கிட்டிருப்பாங்க.
ஒரு guitar, இரண்டு friends, terrace, light ah breeze இந்த setupல கண்டிப்பா யாராவது “Machan… Sid song podu…”ன்னு சொல்லுவான். அப்புறம் lyrics சரியா தெரியாமலேயே humming போட்டு emotional ஆகிடுவாங்க. சில singers songs பாடுவாங்க. ஆனா சில singers emotions ah பாடுவாங்க. Sid அந்த second category. அவரோட voice கேட்டா old memories வரும், crush நினைவுக்கு வரும், சில நேரம் காரணமே இல்லாமல் sadness வரும், இல்லனா life ரொம்ப cinematic ah feel ஆகும். அதனால தான் இந்த generationக்கு Sid Sriram ஒரு singer மட்டும் இல்ல… ஒரு late-night therapy session மாதிரி.
ARTICLE BY – RJ JOE

