Cinema News Stories

SP Balasubrahmanyam: மாயாஜாலமான மந்திரக் குரல்

SP Balasubrahmanyam: மாயாஜாலமான மந்திரக் குரல் | SP Balasubrahmanyam magical voice
SP Balasubrahmanyam: மாயாஜாலமான மந்திரக் குரல் | SP Balasubrahmanyam magical voice

மாயாஜாலமான மந்திரக் குரல், பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மக்களை தன் பக்கம் ஈர்த்த ஒரு மாமனிதர், மக்கள் அனைவராலும் “பாடும் நிலா”னு செல்லமாக அழைக்கப்படும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள். அவரோட வாழ்க்கையைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

1946-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி ஆந்திரப் பிரதேசத்துல பிறந்த SPB-க்கு இசை மேல ரொம்ப ஆர்வம் இருந்தாலும், முதல்ல இன்ஜினியரிங் படிக்கணும்னுதான் ஆசை. அதனால அதைப் படிக்கவும் ஆரம்பிச்சாரு. ஆனா உடல்நலப் பிரச்சனை காரணமா படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்துச்சு.

அதுக்கப்புறம் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் இவங்களோட சேர்ந்து இசை நிகழ்ச்சிகள்ல பாட ஆரம்பிச்சாரு. நிறைய மேடைகள்ல, நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு ஏகப்பட்ட பரிசுகளையும் வென்றிருக்காரு. அதே நேரத்துல இசையமைப்பாளர்களை சந்திச்சு, படங்கள்ல பாட வாய்ப்பு கேட்டுக்கிட்டே இருந்தாரு.

அதன் பலனாக 1969-ல் வெளியான “சாந்தி நிலையம்” படத்துல இடம்பெற்ற “இயற்கை என்னும் இளைய கன்னி” பாடலைப் பாடுற வாய்ப்பு அவருக்குக் கிடைச்சது. அதுக்கப்புறம் தொடர்ந்து திரைப்படங்கள்ல பாட ஆரம்பிச்சாரு.
1979-ம் ஆண்டு வெளியான “சங்கராபரணம்” திரைப்படத்துல அவர் பாடிய பாடல் அவரை உலக அளவுல பிரபலமாக்குச்சு. அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைச்சது.

ஆரம்பத்துல SPB-க்கு தமிழ் சரியா தெரியாது. அதனால பாடல் வரிகளை தெலுங்குல எழுதி வச்சு பயிற்சி பண்ணி பாடுவாரு. இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, அவரு முறையா சங்கீதம் கத்துக்கிட்டதும் கிடையாது. இயற்கையாவே கிடைச்ச திறமையும், இடைவிடாத பயிற்சியும் தான் அவரை மக்கள் மனசுல பெரிய இடத்துக்கு கொண்டு போயிருக்கு.

இவர் தமிழ்ல பாடிய பாடல்கள்ல “வளையோசை கலகலவென”, “முன்பனியா”, “மண்ணில் இந்தக் காதலன்றி”, “இது ஒரு பொன்மாலைப் பொழுது”, “மன்றம் வந்த தென்றலுக்கு”, “என்ன சத்தம் இந்த நேரம்”னு சொல்லிக்கிட்டே போகலாம்.

அன்று முதல் இன்று வரை எல்லா தலைமுறையினரின் மனசுலயும் தனக்கென ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சிருக்காரு SPB. 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்திருக்காரு. ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்காரு. அதுமட்டுமில்லாம, நான்கு வெவ்வேறு மொழிகள்ல தேசிய விருது பெற்ற ஒரே பின்னணிப் பாடகர் என்ற பெருமையும் அவருக்குத்தான்.

இதுமட்டுமில்லாம எண்ணிலடங்காத விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கியிருக்காரு. 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி எதிர்பாராத விதமா கொரோனா தொற்று காரணமாக காலமானாரு. என்னதான் அவர் இப்போ நம்ம கூட இல்லன்னாலும், அவர் பாடிய பாடல்கள் மூலமா இன்னைக்கும் கோடிக்கணக்கான மக்களோட மனசுல வாழ்ந்துகிட்டேதான் இருக்காரு. இசை உலகத்துல ஒரு பல்கலைக்கழகம் இருந்தா, அதுக்கு குருவா இருக்கக்கூடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் தான்.

அவரோட பிறந்தநாளான இன்னைக்கு, நாமும் அந்த மாபெரும் கலைஞரை அன்போட நினைவுகூர்வோம்.

Article by – RJ Sandhiya