பூவுலகில் நிலத்தில் வாழ்கின்ற மிகப்பெரிய விலங்கினமாகவும், மனிதனுக்கு அடுத்தபடியாக நீண்ட ஆயுட்காலம் கொண்ட பாலூட்டியாகவும் விளங்குவது யானை ஆகும். கம்பீரமான தோற்றமும், வியக்கத்தக்க நுண்ணறிவும் கொண்ட இந்த பிரம்மாண்ட விலங்கினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.
யானைகளின் வகைகள்
யானைகள் பொதுவாக 3 முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:
- ஆப்பிரிக்கா புல்வெளி யானைகள்
- ஆப்பிரிக்கா காட்டு யானைகள்
- ஆசிய யானைகள்
இவற்றுக்கிடையே பல உடல் அமைப்பிய வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவில் வாழும் யானைகளில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலின யானைகளுக்கும் தந்தங்கள் உண்டு. ஆனால், ஆசிய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே பொதுவாகத் தந்தங்கள் காணப்படுகின்றன; அரிதான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே பெண் யானைகளுக்கும் தந்தங்கள் வளர்வதுண்டு.
உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை
- உணவு மற்றும் நேரம்: ஒரு நாளைக்கு சுமாராக 140 முதல் 250 கிலோ எடை கொண்ட உணவுகளை இந்த யானைகள் உட்கொள்கின்றன. இதற்காகத் தங்களின் நாளில் 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதிலேயே செலவிடுகின்றன. மீதமுள்ள 8 மணி நேரத்தை ஓய்வுக்காக ஒதுக்குகின்றன.
- சமூக வாழ்க்கை: யானைகள் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை; மாறாக, எப்போதுமே கூட்டுக் குடும்பங்களாகவே வாழ ஆசைப்படுகின்றன.
- அதிசய தும்பிக்கை: யானைகளின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் தும்பிக்கைதான். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான திசுக்களைக் கொண்டுள்ள இந்தத் தும்பிக்கை மூலம் உணவை எடுத்தல், நீர் பருகுதல் மற்றும் வலுவான பொருட்களைத் தூக்கிச் சுமப்பது போன்ற பல காரியங்களைச் செய்கின்றன.
பலம் வாய்ந்த விலங்கிற்கு ஒரு சிறிய எதிரி!
யானைகளின் தோல் பார்ப்பதற்கு கடினமானதாகத் தோன்றினாலும், உண்மையில் அது கொஞ்சம் பஞ்சு போன்று மெத்து மெத்தென்றே இருக்கும். இதன் பிரம்மாண்டமான உடலமைப்பைக் கண்டு சிங்கம், புலி போன்ற மாமிச பட்சணிகள் கூட இவற்றை வேட்டையாடத் தயங்கும்.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், இந்த பிரம்மாண்டமான விலங்கைச் சின்னஞ்சிறு கொசுக்கள் மிக லாபகமாகத் தாக்கி ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. காரணம், யானையின் தோல் மென்மையாக இருப்பதுதான்.
அதேபோல், வன விலங்குகளில் மிகப்பெரியதான யானையின் உண்மையான மற்றும் கொடூரமான எதிரி மனிதன் ஆவான். தன் சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும், காடழிப்பு நடவடிக்கைகளுக்காகவும் மனிதன் யானைகளைக் கொன்று வருகிறான். குறிப்பாக, அதிக விலைமதிப்பற்ற தந்தங்களுக்காக யானைகள் திட்டமிட்டு வேட்டையாடப்படுவதால், உலகளவில் அவற்றின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருமளவில் குறைந்து வருகிறது.
உலக யானைகள் தினம் வரலாறு
யானைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், கனடா நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் வில்லியம் சாப்ட்வேர் (William Shatner) 2012 ஆம் ஆண்டு யானைகளைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார். உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து நாட்டின் யானைகள் பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து, திரைப்படத் துறையைச் சேர்ந்த பட்2013-ல் இருந்து அதிகாரப்பூர்வமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுத் திரைப்படம் வெளியிடப்பட்ட நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி, ஒவ்வொரு வருடமும் “உலக யானைகள் தினமாக” (World Elephant Day) உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
“இன்று ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம். எதிர்கால சந்ததிக்காக வனங்களையும், வனத்தின் அரசனான யானைகளையும் காப்போம்!”
Article by: K.S.நாதன், சூரியன் FM, கோவை.

