Specials Stories Trending

தளபதிக்கு பிறந்தநாள்!!!

Thalapathy
Thalapathy

இன்று (22.06.2020) தளபதி விஜய் தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார் என்று சொல்வதை விட நாடே தளபதியின் பிறந்தநாளை கொண்டாடுகிறது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். 

என்னதான் தளபதியின் பிறந்தநாள் ஜூன் 22 ஆக இருந்தாலும், ரசிகர்கள் அவர் பிறந்தநாளை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தினம் தினம் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #HappyBirthdayThalapathy, #HBDThalapathy போன்ற Tagகள் மூலம் ரசிகர்கள் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் இணையதள பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணைந்து தளபதியை வாழ்த்தி வருகின்றனர். தளபதி விஜய் நடித்து திரைக்கு வர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படக்குழு சார்பில் தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வாழ்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர், அந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Koluthungada…

திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் …

இதுவரை 63 படங்களில் நடித்த விஜய் ரசிகர்கள் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான தளபதியாக உருவாகியுள்ளார். தன் திரையுலக வாழ்க்கையில் பல தோல்விகளையும், அவமானங்களையும் ஆரம்பகாலத்தில் சந்தித்த தளபதி தன்னை தானே செதுக்கி மெருகேற்றி படிப்படியாக கோலிவுட்டில் தனது வெற்றி சரித்திரத்தை இயற்றியுள்ளார்.


ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்பட்ட இவர் காலப்போக்கில் கோலிவுட்டின் தளபதியாக உருவாகினார். தென்னிந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூல் செய்த படங்களுள் பெரும்பாலான படங்கள் விஜய் நடித்த படங்கள் தான்.அதுமட்டுமின்றி விஜய் தனது சொந்த குரலில் பாடும் பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் தான். சமீபத்தில் விஜய் பாடி வெளிவந்த குட்டி ஸ்டோரி பாடல் இணையத்தில் பல சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அடுத்தபடியாக குடும்ப குடும்பமாக சென்று ஒருவரின் அனைத்து படங்களையும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றால் அது தளபதி விஜய் படம் தான் என்று சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார் நம் இதய தளபதி.

இவரது உன்னால் முடியும் தோழா பாடலில் வரும் ‘ நதி போலே ஓடிக்கொண்டு இரு’ என்ற வரிகளுக்கு ஏற்ப இவரும் தான் எடுத்த முயற்சிகள் தவறினாலும் ஒருபோதும் முயற்சிக்க தவறாமல் தன்  திரையுலக பயணத்தில் நதி போலே ஓடிக்கொண்டிருந்தார். அந்த விடாமுயற்சிதான் தளபதியின் தாரக மந்திரமாக திகழ்ந்தது.

தளபதியை ரசிகர்கள்  தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதற்கு அவரது வெற்றிப்படங்கள் மட்டும் தான் கரணம் என்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில் தளபதி விஜய் தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்று  நினைக்காமல் தன் ரசிகர்களும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர். ரசிகர்களை எந்த விழாவில் காண நேரிட்டாலும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார். அதுமட்டுமின்றி தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல உதவிகளையும் ரசிகர்கள் மூலம் விஜய் செய்து வருகிறார்.

தளபதிக்கு சூரியன் FM சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags