Specials Stories Trending

செல் முருகனின் உருக வைக்கும் பதிவு !!!

நடிகர் விவேக் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த கலைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான செல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக்குடன் தான் செய்த நகைச்சுவையான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விவேக்கும் செல் முருகனும் இணைந்து எண்ணற்ற காமெடி காட்சிகளில் நடித்து மக்கள் மனதில் தங்களின் கூட்டணிக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர். விவேக் அவர்களின் மறைவுக்கு பின் செல் முருகன் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருப்பார். நல்ல நண்பனை இழப்பது எவ்வளவு வலி தரும் என்பதை உணர்த்தும் வகையில் சின்ன கலைவாணருக்கு கவிதை ஒன்றை எழுதி தனது சோகத்தை வெளிப்படுத்தினார். அந்த கவிதை பதிவை கீழே காணுங்கள்.

Image

விவேக் அவர்களின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் செல் முருகனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 20, 2021) இரவு செல் முருகன் பதிவிட்ட வீடியோ அனைவரையும் மனதுருக வைத்துள்ளது. அந்த வீடியோவில் செல் முருகன் விவேக்குக்கு முன் selfie கேமெராவில் ஒரு Music-ற்கு காமெடியாக Reaction-கள் கொடுப்பது போல பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவிற்கு அவர் கொடுத்த Caption, அவரின் துக்கத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. “Will be nice if we hv a rewind button ( கடந்த காலத்துக்கு செல்ல ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும்) ” என அப்பதிவிற்கு செல் முருகன் Caption கொடுத்துள்ளார். உண்மையான நட்பின் பிரிவை கடந்து செல்வது சுலபமல்ல என்பதற்கு விவேக் – செல் முருகனின் நட்பு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

நடிகர் செல் முருகன் வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.