சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 44வது திரைப்படத்தின் Title-ஐ தற்போது வெளியிட்டுள்ளனர். நேற்றிலிருந்து இப்படத்தின் நட்சத்திர பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வந்த சன் பிக்சர்ஸ் இன்று தனுஷ் ரசிகர்களுக்கு Title-ஐ வெளியிட்டு மேலும் உற்சாகம் அளித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் அனிருத் தனுஷுடன் இப்படத்தில் இணைகிறார். தனுஷ் மற்றும் அனிருத் இணைந்தாலே அப்படத்தின் பாடல்கள் மாபெரும் வெற்றியடையும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் D44 திரைப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கலாம்.
நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நட்சத்திரப் பட்டியல் அறிவிப்பில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் தனுஷுடன் இணைந்து இப்படத்தில் நடிக்க உள்ளனர் என அறிவித்தனர். இந்நிலையில் இன்று இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது.
நடைபெற்ற பூஜையில் நடிகர்கள் தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன் ஆகியோர் பங்கு பெற்றனர். தனுஷை வைத்து குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் R ஜவஹர் தான் இப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை நடைபெற்றது குறித்த சன் பிக்சர்ஸின் Tweet-ஐ கீழே காணுங்கள்.
இப்படத்தின் Title என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்த நிலையில் இப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம் படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் Title அறிவிப்பு குறித்த சன் பிக்சர்ஸின் tweet-ஐ கீழே காணுங்கள்.