Cinema News Stories

LCU-வில் ’லியோ’… உறுதிப்படுத்திய NOC!

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் கைகோர்த்திருக்கும் ’லியோ’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் பெருமளவில் உள்ளதால், வரவிருக்கும் திரைப்படங்களில் மிகப்பெரிய Opening இருக்கும் படமாக ’லியோ’ கருதப்படுகிறது.

ஒரு கேங்ஸ்டர் கதை என்று அறிவிக்கப்பட்ட ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பு முடிந்த நிலையில் காஷ்மீரில் ஒரு Patch Work-க்காக இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இன்னொரு புறம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் சுமூகமாக நடந்து வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகும் ‘லியோ’ படத்தின் அடுத்த அப்டேட்டை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.

அதே நேரத்தில் படம் அறிவித்த நாளில் இருந்தே ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜின் Cinematic Universe(LCU) இல் இப்படம் இருக்கிறதா என்று அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ தயாரிப்பாளர்களிடம் இருந்து ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர் NOC (ஆட்சேபனை இல்லா சான்றிதழ்) வங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் LCU-வில் ‘லியோ’ இருக்கிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ள ’லியோ’ ரிலீஸுக்கு முன்பே பெரும் வசூலை ஈட்டி வருகின்ற நிலையில் LCU-விலும் இடம்பெற்றிருக்கிறது என்றால், படத்தின் வியபாரம் பலமடங்கு அதிகமாகும் என கூறப்படுகிறது.

Article By Sathishkumar Manogaran