Cinema News Stories

ஜெயிலர் – The Record Maker – First week collection Report

வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இன்று வரை பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் செய்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் பல சாதனைகளை படைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட தமிழக்தில் 90 % திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் தான் திரையிடப்படுகிறது. அதிலும் பெரும்பாலான காட்சிகள் Housefull ஆகியுள்ளது . இதற்கிடையில், ஆகஸ்ட் 15, செவ்வாய்கிழமை, சுதந்திர தினத்தன்று மட்டும் இந்தியா முழுவதும் ஜெயிலர் ரூ.33 கோடியை வசூலித்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய Treat ஆக அமைத்துள்ள ஜெயிலர் படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். Collection Report-ன் படி ஒரு வாரத்தில் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 375 கோடிகளை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதுதான் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் ஒரு வாரத்தில் செய்த அதிக வசூல் ஆகும்.

இந்த வார இறுதியில் 500 கோடிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படத்தை மெகாஹிட் செய்த ரசிகர்களுக்கும், ஊடகம் மற்றும் பத்திர்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மீண்டும் ஒரு முறை நான் Record Breaker இல்லை Record Maker என்று நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .

Article By Sathishkumar Manogaran