ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் Friendship திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு படங்கள் திரைக்கு வர முடியாமல் காத்திருந்தது. சமீபத்தில் சில கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி விட்டது.
Friendship திரைப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜான் பால் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படம் நண்பர்களைப் பற்றி மட்டும் இல்லாமல் சமூகத்திற்கும் ஒரு நல்ல கருத்தை கூறுவது போல இப்படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது.
இப்படத்திற்கு டி.எம். உதய குமார் இசையமைத்துள்ளார். வெளியான டிரைலரை வைத்துப் பார்க்கும்போது Friendship திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்தை கொண்டிருப்பது போல தெரிகிறது.
இப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த Trailer-ஐ பகிர்ந்து வருகின்றனர்.
பிரெண்ட்ஷிப் திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் டிரைலரை கீழே காணுங்கள்.