நம்ம ஊர்ல வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா போதும் நம்ம வீட்டு பசங்கள தெரு முனையில இருக்குற பெட்டிகடையில வாங்க சொல்றது கோலிசோடாதான். முக்கியமா அந்த கோலிசோடா பாட்டில்ல உள்ள கோலிய அழுத்தி Open பண்ணுறது ரொம்ப Satisfying-ஆ இருக்கும்.
இப்போலாம் Coke, Pepsi மாதிரி வெளிநாட்டு குளிர்பானம்தான் குடிக்கிறோம், எத்தனபேரு கோலிசோடா குடிக்கிறிங்கன்னு தெரியல. இந்த கோலிசோடா உருவானதே நம்ம தமிழ்நாட்டுலன்னு எத்தன பேருக்கு தெரியும். என்னதான் வெளிநாட்டு Cooldrinks-லாம் வந்தாலும் இந்த கோலிசோடா ஓட மவுசு குறையலன்னுதான் சொல்லனும்.

எவ்வளவு வயசானாலும் கோலி சோடா பாட்டில்ல உள்ள கோலி எப்படி அதுக்குள்ள போயிருக்கும், இந்த கோலி எப்படி மேலேயே Lock அகுது, இப்படி மனசுக்குள்ள பலகேள்விகள் கேட்டுகிட்டே அந்த கோலிசோடாவ குடிப்போம். கோலி சோடா பாட்டில் ஜெர்மன் நாட்டுலதான் அப்போல இருந்து இப்போ வரைக்கும் தயாரிக்கப்படுது, அங்கிருந்து இறக்குமதி செஞ்சு இங்க சோடாவ நிரப்பி நமக்கு கொடுக்குறாங்க.
இத 1872-ல தயாரிக்க ஆரம்பிச்சாங்க, வேலுர்ல கண்ணன் & கோ கோலிசோடா அப்படிங்குற கம்பேனியும், திண்டுக்கல்ல மப்பிள்ளை வினாயகர் அப்படிங்குற சோடா கம்பெனியும் இப்போ வரைக்கும் நமக்கு மட்டுமில்ல பல ஊர்களுக்கும் சோடா அனுப்புறாங்க. 1947-ல சுதந்திரம் கிடைக்கிற வரைக்கும் இந்த கோலிசோடாவ தடை பண்ணிருந்தாங்க.

ஏன் அப்படின்னா அதுல நம்ம நாட்டு போராட்டக்காரர்கள் “சுனா’ அதாவது கால்சியம் ஹைட்ராக்ஸைடு நிரப்பி அத ஆயுதமா பயன்படுத்துனதா சொல்றாங்க. முன்னாடியெல்லாம் அதிகமா வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் குடிப்போம், கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஜல்லிக்கட்டு போரட்டத்துக்கு அப்பறம் நம்ம நாட்டு குளிர்பானங்களதான் குடிக்கனும்னு, திரும்ப நம்ம கோலிசோடவ Hero ஆக்குனாங்க.
வெறும் பெட்டிக்கடையில மட்டுமே கிடச்சுக்கிட்டு இருந்த கோலிசோடா இப்போ 5 ஸ்டார் ஹோட்டல்லகூட கிடைக்குது. இந்த கோலிசோடா இப்போ பல Flavour-ல கிடைக்குது, ஆனா அப்போலாம் Lemon & Orange Flavour மட்டும்தான். Lemon Juice ஓட Sugar Syrup சேர்த்து அந்த கோலி உள்ள பாட்டில்ல நிரப்பி அதுல கார்பன்-டை ஆக்ஸைடு நிறப்புவாங்க. அந்த சமயம் ஒரு Machine-ல போட்டு 64 தடவை அதை சுத்துவாங்களாம்.

அது அந்த பாட்டில் உள்ள ஒரு Pressure -அ உருவாக்கி அந்த கோலியும் Lock ஆகுது, இப்படி பண்ணுறது மூலமா அதோட Taste நமக்கு கிடைக்கும்னு சொல்றாங்க. உங்களுக்கு கோலி சோடா புடிக்கும்னா, உங்களுக்கு பிடிச்ச Flavour-அ Comment பண்ணுங்க.