Cinema News Stories

25 மில்லியன் பார்வைகளை நெருங்கும் ’காவாலா’

Kaavala

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

காவாலா பாடலில் முழுக்க முழுக்க படத்தின் நாயகி தமன்னா தான் வலம் வருகிறார். Jee Karda, Lust Stories 2 ஆகிய Web Series-கள் வெளியான பிறகு தமன்னாவிற்கு இந்தியா முழுவதுமிருந்த Fan Base மிகவும் அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க விஜய் வர்மாவுடனான காதலையும் தமன்னா வெளிப்படுத்தியிலிருந்து பெரியளவில் வைரலாகியுள்ளார்.

இதையடுத்து இணையத்தில் தேடப்படும் இந்திய பிரபலங்களில் முதல் 10 இடங்களுக்குள் தமன்னா தற்போது இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் உடன் தமன்னா இணைந்து நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ‘காவாலா’ Lyrical Video வெளியாகி உலகளவில் ட்ரெண்டானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமன்னாவின் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த பாடலை பார்த்து ரசித்து வருகின்றனர். இயக்குநர் நெல்சன் தன்னுடைய ஸ்டைலில் பாடலை காட்சிப்படுத்தியுள்ளார். தமன்னாவின் நடனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதுவரை 20 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை கடந்துள்ள இப்பாடல் விரைவில் 25 மில்லியன் பார்வைகளை கடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.