Cinema News Specials Stories

14 வருடங்களில் 400 படங்கள்!

Yogi Babu Photos

அடுத்தவர்களுக்காக முகமூடி அணிந்து கொள்பவர்களுக்கு மத்தியில் முகத்தையும், முடியையும் வைத்து தனக்கென ஒரு அடையாளம் பெற்றவர்.

கூட்டத்தில் ஒருவனாக தொடங்கிய இவரது பயணம் இவரது உழைப்பால் கூட்டத்தில் முதல்வனாக மாறிப் போனது. ராணுவத்தில் சேர இருந்த இவரது முயற்சியில் சின்ன இடையூறு ஏற்பட, பாதை சின்னத்திரை பக்கம் திரும்பியது. திருப்பத்தை எதிர்பார்க்காதவருக்கு விருப்பமான துறையாக மாறியது சினிமா. சினிமாவின் யோகம் யோகி படம் மூலம் கிடைத்திட சிட்டி பாபு, Snake பாபு இவர்களின் வரிசையில் யோகி பாபு Enter ஆனார்.

ஏதோ ஒரு பாட்டில் இவரின் பரட்டை தலையிலோ சுருட்டை முடியிலோ சுமாரான முகத்திலோ அல்லாது இவர் சுறுசுறுப்பில் சுந்தரத்தை கண்டார் சுந்தர் சி. பலரை கலகலப்பாக வைத்திருக்கும் இவருக்கு கலகலப்பிலும் வாய்ப்பு கிடைக்க இவரின் வளர்ச்சி Express வேகத்தில் செல்லத் தொடங்கியது.

அதனால் Chennai Express-ல் நடித்தார். என் படத்தில் நீ நடிக்க வேண்டுமா என்று கேட்டவர்கள் எல்லாம் என் படத்தில் நீ நடித்து ஆக வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தனர். கோலிவுட்டில் இவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று மாறிட, காமெடி நடிகனாக இருந்த இவர் கதையின் நாயகனாக மாறினார்.

Kollywood -ல் ஆரம்பித்த இவர் இன்று Bollywood-லும் அடியெடுத்து வைத்துவிட்டார். 14 வருடங்களில் 400 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இவரின் Upcoming Movie List பெரிதாக உள்ளது. மக்களோட Stress-அ குறைக்கும் இவரோட Patch Work என்றும் தொடர்ந்திட யோகி பாபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Mozhiyan

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.