Cinema News Stories

ART CHOOSE HIM – Director Karthik Subbaraj

சினிமானா பொழுதுபோக்கு, Waste of Time இப்படினு சொல்றவங்களுக்கு மத்தியில தான் அந்த சினிமாவ வாழ்க்கைனு நினச்சு ஓடிட்டு இருக்கிற மனுஷங்களும் இருக்காங்க. உனக்கு எதுக்குப்பா சினிமா வேற ஏதாவது வேலைய பாக்கலாம்னு சொல்றவங்க வார்த்தைய ’சபாஷ் சூப்பரா பண்ணிட்டியே’ன்னு சொல்ல வைக்க அவங்க ரொம்ப தூரம் போக வேண்டியது இருக்கு.

அப்படி தன்னோட வாழ்க்கைக்கு தான் எடுத்த ஒரு முடிவ இந்த உலகத்தையே சூப்பர்-னு சொல்ல வச்சவரு தான் நம்ம கதையோட ஹீரோ. பொதுவா horror படம்னாஅதிகமா இருட்டா தான் இருக்கும். அப்படி இருட்டு சூழ்ந்த Pizza படம் தான் இயக்குநரா ஒருத்தர வெளிச்சத்துக்கு கொண்டு வந்துச்சு.

அவர பத்தி சொல்லனும்னா மதுரைக்கு இருக்க அடையாளத்துல ஒன்னு தான் ஜிகர்தண்டா, அப்படிப்பட்ட ஜிகர்தண்டாவ மதுரையில இருந்து வந்து தன்னோட அடையாளமா மாத்துன ஒருத்தர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். என்ஜினியரிங் Certificate, IT வேல, appraisal, On -site-னு வாழ்க்க செட்டில் ஆனாலும் on screen-ல தன்னோட ஸ்டோரி கூடவே A கார்த்திக் சுப்பாராஜ் படம் அப்படி வரணும்னுகிற ஆசை, அவர் சினிமா மேல வச்ச காதல் அவர சினிமாக்கு கூட்டிட்டு வந்துச்சு.

கோடம்பாக்கத்துல கதைகளோடு, கனவுகளோடு சுத்திட்டு இருக்குற இயக்குனர்கள் கூட்டத்துல ஒருத்தரா சேர்ந்தார். காலத்துக்கு எப்போதும் ஒரு மாற்றம் தேவைப்படும் அந்த மாற்றம் பல பேரோட வாழ்க்கையிலயும் மாற்றத்த குடுக்கும். அப்படி வந்த மாற்றம் தான் இந்த சோசியல் மீடியா. அப்போ தான் குறும்படம் எடுத்து you Tube மாதிரியான சமூகவலைதளத்துல பதிவேற்றம் செய்றது, இயக்குனராக என்ன வழினு யோசிச்சவங்களுக்கு இன்னொரு பாதையா இருந்துச்சு.

அந்த பாதைல நண்பர்களோட கார்த்திக் சுப்பாராஜும் தன்னோட பயணத்த ஆரம்பிச்சாரு. தொலைக்காட்சியோட பார்வையும் குறும்படம் பக்கம் திரும்ப அடுத்தப்படிக்கு அது அடித்தளமா மாறுது. இவரோட முயற்சிக்கு குடும்பமும், நண்பர்களும் பக்க பலமா இருக்க தமிழ் சினிமாவோட கதவுகள இந்த இயக்குனரும் தட்டி திறக்குறாரு.

இவரோட ஜிகர்தண்டா, இறைவி, ஜிகர்தண்டா டபுள் x, மஹான் மாதிரியான படங்கள் நம்ம ஊரு படங்கள வேற ஒரு கண்ணோட்டத்துல பார்க்க வச்சுது. கோடம்பாக்கத்துல இருந்து திரும்பி போன பல பெட்டிக்கட பழனிகளோட கனவுகளின் பிரதிபலிப்பா இருந்துச்சு இவரோட வெற்றி. இவர பத்தி இவர் ஸ்டைல சொல்லனும்னா ‘ART CHOOSE HIM‘ அப்படிப்பட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் பிறந்த தினம் மார்ச் 19-ம் தேதி இன்று.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகின்ற அதே நேரத்தில் அவருடைய திரை பயணத்தில் பல வெற்றி பெற்று பல உயரங்களை அவர் அடைய வேண்டும் என்று சூரியன் எப்ஃஎம் தன் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறது

RJ Mozhiyan, Pondy.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.