பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூடான், சீனா ஆகிய நாடுகளில் 3500 கி.மீ.க்கு மேல் பரவியுள்ள இமயமலை உலகின் மிகப்பெரிய மலைத் தொடராகும். அந்த கம்பீரமான மலைத்தொடரின் பெரும்பகுதி நேபாளத்தில் உள்ளது. எனவே இது ‘இமயமலை தேசம்’ என்ற பட்டத்தை பெற்றுள்ளது. மேலும் இதன் காரணமாக நேபாளத்தில் மலையேற்றம் செய்வது உலகளவில் பிரபலமாக இருக்கிறது.

பிற நாடுகளால் காலனித்துவப்படுத்தப்படாத சில நாடுகளில் நேபாளமும் ஒன்று. நேபாளம் சிறிய நாடாக இருந்தாலும், சுதந்திரமான நாடாகவே இருந்து வருகிறது. நேபாளத்திற்கு சுதந்திர தினம் இல்லாததற்கு இதுவே காரணம். தெற்காசியாவிலேயே மிகவும் பழமையான நாடு நேபாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் செவ்வக வடிவிலான கொடி இல்லாத ஒரே நாடு நேபாளம், முக்கோண வடிவிலான அதன் கொடி மிகவும் தனித்துவமானது. இமயமலை தேசத்தின் கொடியானது இரண்டு சிவப்பு முக்கோணங்களையும் நீல நிற எல்லைகளையும் கொண்டுள்ளது. மேல் முக்கோணம் சந்திரனைக் கொண்டுள்ளது, கீழ் முக்கோணத்தில் சூரியன் உள்ளது. சூரியனும் நட்சத்திரங்களும் வானத்தில் இருக்கும் வரை தேசம் இருக்கும் என்பதை இது குறிக்கிறது. இந்தக் கொடியின் அடிப்படை வடிவமைப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது.

நேபாளம் 1960 களில் மரிஜுவானா பிரியர்களின் மையமாக இருந்தது. உலகம் முழுவதிலுமிருந்து மரிஜுவானா பிரியர்கள் பலர் நேபாளம் வந்து செல்வது வாடிக்கையானது. 1973 ஆம் ஆண்டு நேபாளத்தில் மரிஜுவானா சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இப்போது வரை அந்த சட்டம் தொடர்கிறது. இருப்பினும் நேபாளத்தில் மரிஜுவானா வளர்ச்சிக்கு சாதகமான காலநிலை உள்ளது, அதனால் பெரும்பாலும் கிராமப்புறங்களில், சாலைகள், பள்ளங்கள், விவசாய நிலங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் மரிஜுவானாக்களை காண முடியும்.

புத்த மதத்தை நிறுவிய கௌதம புத்தர் நேபாள நாட்டின் கபில்வஸ்துவில் உள்ள லும்பினியில் பிறந்தார். சாக்கிய வம்சத்தின் இளவரசராக பிறந்தார் புத்தர். அவர் பிறந்த இடம் லும்பினியில் மாயா தேவி கோயிலுக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களின் புனித யாத்திரை தலமாகும்.

- Yashika Aannand 20+ Stunning Photos Go Viral – Internet Can’t Stop Talking!
- Raiza Wilson Charms Fans with Her Adorable New Photos – Viral on Social Media
- 2025 முதல் பாதியில் 100 கோடி வசூல் படைத்த தமிழ் படங்கள்
- Saanve Megghana Sets Internet Abuzz with 20 Stunning New Looks
- Kayadu Lohar Stuns the Internet with Her Latest Photos – Trending Now Online
உலகின் பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில் நேபாளத்தில் இணைய வேகம் குறைவாக உள்ளது. இணைய சோதனை மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, நேபாளத்தின் சராசரி மொபைல் இணைய வேகம் வினாடிக்கு 10.78 Mbps ஆகவும், உலகளவில் 28.02 Mbps ஆகவும் உள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டில், மொபைல் இணைய வேகத்தில் 145 நாடுகளின் பட்டியலில் நேபாளம் 130 வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகிலேயே வாழும் கடவுள் உள்ள ஒரே இடம் நேபாளம். வாழும் கடவுள்கள் குமரி என அழைக்கப்படுகிறார்கள். குமரி என்பதன் நேரடிப் பொருள் கன்னிப் பெண். நேபாளத்தில் பெண் குழந்தைகள் தெய்வத்தின் அவதாரங்களாக பார்க்கப்படுகிறார்கள். குழந்தைகளாக, அவர்கள் கோயில்களில் வாழ்கிறார்கள், திருவிழாக்களில் தேர்களில் கொண்டு செல்லப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் பௌத்தர்களால் வழிபடப்படுகிறார்கள். அவர்கள் பருவமடைந்தவுடன் ஓய்வு பெறுகிறார்கள்.

நேபாள மக்கள் தங்கள் துணிச்சலுக்கு உலகம் முழுவதும் பெயர் பெற்றவர்கள். நேபாளத்தின் மீதான படையெடுப்பில் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த பின்னர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சமாதான உடன்படிக்கையை 1815 ஆம் ஆண்டு செய்து கொண்டதிலிருந்து நேபாள கூர்க்கா வீரர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர். கூர்க்கா என்ற பெயர் கோர்காவிலிருந்து வந்தது. கோர்கா என்பது ஆரம்பத்தில் நேபாள மக்களின் ஒருங்கிணைப்பு தொடங்கிய துணிச்சலான மனிதர்களின் நிலம். “கோழையாக இருப்பதை விட இறப்பது சிறந்தது” என்பது உலகப் புகழ்பெற்ற நேபாள கூர்க்கா வீரர்களின் முக்கிய குறிக்கோள்.

நேபாளம் பல கின்னஸ் உலக சாதனைகளை செய்துள்ளது. இது நேபாளத்திற்கு தனி சிறப்பு சேர்க்கிறது. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இங்கு உள்ளது. அதிகபட்சமாக 4800 மீ உயரத்தில் உள்ள ஏரியான டிலிச்சோ ஏரி மற்றும் சில ஏரிகள் இங்கு அமைந்துள்ளது. இங்குள்ள ஷே ஃபோக்சுண்டோ ஏரி 3600 மீ உயரத்தில் அமைந்துள்ளது, இதன் ஆழம் 145 மீ ஆகும். காளி கண்டகியின் 1200 மீ ஆழமான பள்ளத்தாக்கு மற்றும் பூமியின் மிக உயர்ந்த கடல் மட்டத்திலிருந்து 435 மீ உயரத்தில் உள்ள பள்ளத்தாக்கான அருண் பள்ளத்தாக்கும் இங்கு உள்ளது.

நேபாளம் பல இன, பல மொழி மற்றும் பல மதங்களைக் கொண்ட நாடாகும். இது வேற்றுமையில் ஒற்றுமையைப் பெருமைப்படுத்துகிறது. 123 க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் பேசும் 80 க்கும் மேற்பட்ட பல்வேறு இனக்குழுக்கள் இந்த நாட்டில் நல்லிணக்கம் மற்றும் அமைதியுடன் வாழ்கின்றனர். நேபாளத்தின் வெவ்வேறு இனக்குழுக்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் பண்டிகைகள் உண்டு. அவை பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன. நேபாளத்தில் கலாச்சார மற்றும் வரலாற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டால் நேபாளம் எவ்வளவு மனிதநேயமிக்க நாடாக உள்ளது என்பது தெரியும்.
