சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்துள்ளது.
டான் மற்றும் டாக்டர் படங்கள் 100 கோடிகளை தாண்டி வசூல் செய்ததால் நானும் தமிழ் சினிமாவின் Box Office King தான் என்று நிரூபித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரது முந்தைய படமான Prince Box Office-ல் படு தோல்வியை சந்தித்தது .
இதனால் மறுபடியும் ஒரு மாபெரும் வெற்றி கொடுக்க வேன்டும் என்ற கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருந்தார். இந்நிலையில் மண்டேலா படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த மடோன் அஷ்வின் இயக்கத்தில் “மாவீரன் ” படத்தில் நடித்தார்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் யோகி பாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் முந்தைய படம் கொஞ்சம் தவறி விட்டது. ஆனால் மாவீரன் கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று உறுதியளித்தார் சிவகார்த்திகேயன்.
இப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சிவகார்த்திகேயன் கூறியது போல, அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் பெரும் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது, தமிழ்நாடு மற்றும் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 2வது நாள் வசூலின் படி, விஜய்யின் வாரிசை விட மாவீரன் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைகளின்படி, வாரிசு 2 நாட்களில் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ 4 கோடி வசூல் செய்தது, அதேசமயம் மாவீரன் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 2 நாட்களில் சுமார் ரூ 5 கோடியை வசூலித்துள்ளது.
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 2 நாட்களில் வாரிசு ரூ 8.75 கோடி வசூலித்ததாகவும், மாவீரன் 2வது நாளில் ரூ 9.34 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 4 நாட்களில் உலகம் முழுக்க 50 கோடியை மாவீரன் திரைப்படம் வசூலித்துள்ளது. விஜய் மற்றும் அஜித்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பதையும் தாண்டி விஜய் படத்தை விட சிவகார்த்திகேயனின் படம் அதிக வசூல் செய்துள்ளது தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.