Specials Stories

74-வது சுதந்திர தினம் !!!

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் சுதந்திர தினத்தை பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் சில வியப்பளிக்கும் தொகுப்புகளை இப்பதிவில் காணலாம்.

1. தேசிய கீதம்

நாம் பாடும் ஜனகணமன என தொடங்கும் தேசிய கீதம் முதன்முதலில் பெங்காலி மொழியில் தான் எழுதப்பட்டது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. இப்பாடலை பாரத பாக்ய விதாதா எனும் பெயரில் ரபீந்திரநாத் தாகூர் பெங்காலி மொழியில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 24, 1950 முதல் தான் இந்தியாவின் தேசிய கீதமாக ஜனகணமன என தொடங்கும் இந்த கீதம் அறிவிக்கப்பட்டது.

2. இரு கீதம் ஒரு கவிஞர்

இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தான் வங்கதேசத்திற்கும் பெங்காலி மொழியில் தேசிய கீதத்தை இயற்றியுள்ளார். உலகிலேயே இரு நாடுகளுக்கு ஒருவர் தேசிய கீதம் எழுதியுள்ளது இதுவே முதலும் கடைசியுமாய் இருந்து வருகிறது.

3. ஆறு நாடுகள், ஒரு சுதந்திர தினம்

இந்திய நாடு மட்டுமின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகில் மேலும் ஐந்து நாடுகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பக்ரைன், வடகொரியா, தென்கொரியா, காங்கோ குடியரசு, லீக்கின்ஸ்டைன் ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

4. எந்நாளும் ஏற்றலாம் தேசியக்கொடி

2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை தவிர ஒரு சாதாரண குடிமகன் வேறு எந்த நாளிலும் தேசியக்கொடியை ஏற்ற முடியாது. அதற்கு நம் இந்திய சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்குப் பின் அந்த சட்டத்தை மாற்றியமைத்த இந்திய அரசு, ஒரு வருடத்தின் எந்நாளில்  வேணாலும் தேசியக் கொடியை ஏற்றலாம் என அறிவித்தது.

5. பகலில் மட்டுமே கொடியேற்றம்

நம் இந்திய நாட்டில் தேசிய கொடியேற்றம்  என்பது பகலில் மட்டுமே நடைபெற வேண்டுமென சட்டம் உள்ளது. மேலும் ஏற்றப்பட்ட கொடியின் மீது எந்த ஒரு கூடுதல் வரைவோ மற்ற நாடுகளின் அடையாளங்களோ இருக்கக் கூடாது.

இந்த 74 ஆவது சுதந்திர தினத்தில் இந்தியர்கள் அனைவருக்குமே நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் செழிக்க வேண்டும் என சூரியன் FM சார்பில் வேண்டி வாழ்த்துகிறோம்.