Specials Stories

Queen of Indian track -P.T.Usha !!!

பெண்கள் கால் பதிக்காத துறையே இன்னைக்கு இல்லனு சொல்றோம், இதுவே ஒரு இருபது, முப்பது, வருஷத்துக்கு முன்னாடி அப்படி இல்ல, ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களோட பெயரை பதிய வைக்க, எக்கச்சக்கமான போராட்டம் இருந்துது.

தன்னோட கனவ எட்டி பிடிக்க ரொம்ப தூரம் ஓட வேண்டியது இருந்துது. அப்படி ஓட்டம், ஓட்டப் பந்தயம்-னு சொன்ன உடனே நமக்கு ஞாபகம் வர்ற முதல் பெயர் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா, அதாங்க PT Usha. Queen of Indian track and field, Payyoli Express-னு போற்றப்படும் PT Usha பல பேர்க்கு inspiration. நம்ம வீட்டு குழந்தைங்க athletics-ல ஆர்வமா இருந்தா கூட நீ எதிர்காலத்துல PT Usha மாதிரி வரப்போறியோனு சொல்லுவோம்.

ஆனா PT Usha-க்கு school days-ல தெரியாது தான் எதிர்காலத்துல ஒரு athlete-ஆ வருவோம்-னு. அவங்க school days ல academics and extracurricular activities னு எதுலயும் அதிக ஈடுபாடு காட்டலயாம். நிறைய நாட்கள் stamina இல்லாம காணப்பட்ட PT Ushaக்கு, ஒவ்வொரு முறை தோல்வியடையும் போது, ஏற்பட்ட மனவருத்தத்த உத்வேகமா மாத்தினாங்க.

அதுதான் schooldays ல நடந்த competition ல தன்னை விட higher standard girls கூட participate பண்ணி win பண்ண வைத்தது. அப்போ ஆரம்பிச்ச அவங்களோட ஓட்டம், International level ல 100-க்கும் மேற்பட்ட medal win பண்ண வைத்தது. National level புது record create பண்ண வைத்தது. முதல் இந்தியா பெண்ணா Olympics ல enter ஆக வைத்தது. Olympic la medal win பண்ணலனாலும், பல கோடி மக்கள்ளோட மனச win பண்ணிடாங்க. இன்னிக்கும் பல பெண்களுக்கு motivation-ஆ இருக்க PT Usha-க்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.