Cinema News Specials

வெளியானது அண்ணாத்தே சேதி !!!

இயக்குனர் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடல் “அண்ணாத்தே சேதி” வெளியாகியுள்ளது.

96 திரைப்படத்திற்கு இசை அமைத்த கோவிந்து வசந்தா அவர்களே துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இந்த சிங்கிள் ஒரு சிறப்பு விருந்தாகவே அமைந்திருக்கிறது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விஜய்சேதுபதி வல்லவர். அந்த வகையில் இப்படமும் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் அமைந்திருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பிரத்தியேக ஸ்டில்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு டிரெண்ட் ஆகி வருகின்றது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் துக்ளக் தர்பார் ஒரு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. .