தலைவர் 168-ன் தாறுமாறு Updates

2020-ஆம் ஆண்டு பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தை பற்றிய முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில் உருவாகவுள்ள தலைவர் 168-ஐ பிரபல இயக்குனர் ‘சிறுத்தை‘ சிவா இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் முதல்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படத்தில் இமான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கவுள்ளார். “தலைவருடன் ஒரு புகைப்படம் எடுத்தால் போதும் என்று இருந்த எனக்கு அவருடன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் தனித்துவமான தத்ரூபமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நல்ல நாயகன் எனும் இடத்தை பிடித்த நடிகர் பிரகாஷ்ராஜூம் தலைவர் 168-ல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தலைவர் 168-ன் கதாநாயகி யாராக இருக்கும், என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தொடர்ச்சியாக இப்படத்தின் மூன்று கதாநாயகிகளைப் பற்றிய Update வெளிவந்துள்ளது.

சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவரும்  சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முதல் முறையாக நடிக்கவுள்ளார்.

” தலைவர் 168-ல் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். இப்படிப்பட்ட வாய்ப்பை எனக்கு அளித்த சன் பிக்சர்ஸுக்கும், இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.”, என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

மேலும் தான் ஒரு பெரிய சூப்பர்ஸ்டார் ரசிகை என்றும், அவருடன் நடிப்பது தனக்கு பெருமை என்றும் கூறியுள்ளார்.

இத்தனை Updateகளை பெற்று ஆரவாரத்துடன் சூப்பர்ஸ்டாரை கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் மேலும் இரண்டு கதாநாயகிகள் பற்றிய Update-உம் வெளிவந்தது.

மீண்டும் மீனா

சுமார் 24 வருடங்களுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிகை மீனா இப்படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இதுகுறித்து மீனா, “ரொம்ப நாளைக்கு அப்புறம் சூப்பர்ஸ்டார் கூட சேர்ந்து படம் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சன் பிச்சர்ஸ் Production-ல் இது என் முதல் படம், சிறுத்தை சிவா இயக்கத்திலும் இது என் முதல் படம். இது ஒரு நல்ல கதையுள்ள படம், நான் வரும் இடங்கள் எல்லாம் மிகவும் கலகலப்பாக இருக்கும்.” என கூறியுள்ளார்.

குஷியுடன் குஷ்பூ

90ஸ் கிட்ஸ்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் இப்படத்தில் நடிகை குஷ்பூவும் நடிக்க போகிறார் எனும் செய்தியும் Official ஆக அறிவிக்கப்பட்டது.

28 ஆண்டுகளுக்கு பிறகு குஷ்பூ சூப்பர்ஸ்டாருடன் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் குஷ்பூவும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்தது.

இதுகுறித்து குஷ்பூ, “ரஜினி சார் கூட நான் நிறைய படங்கள் பண்ணிருக்கேன், அத எல்லாம் மக்கள் நல்லவிதத்துல கொண்டாடினாங்க. 8 வருடங்களா தமிழ் படங்கள் பண்ணாம இருந்தேன். ஒரு நல்ல படம், பெரிய படம் பண்ணனும்னு நினச்சேன். இந்த படத்துல எனக்கு அதுக்கு வாய்ப்பு கிடைச்சது.” என கூறியுள்ளார்.

தலைவர் 168-ன் பூஜை சன் Studio-வில் நடந்தது. அந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன் பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

தலைவர் 168
தலைவர் 168 பூஜை

இப்படம் வெற்றிப்படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம்.

தலைவர் 168 குறித்த சூரியன் FM-ன் ஸ்பெஷல் விடியோவை கீழே கண்டு மகிழுங்கள்: