எந்த கடைக்கு போனாலும் நம்மளால வாங்கமுடியாதது ஆரோக்கியம்… Health is Wealth… சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்னு நம்ம கேள்விப்பட்டுருப்போம். நமக்கான ஆரோக்கியத்த நம்மதான் பார்க்கமுடியும்… இத கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருளா “எனது ஆரோக்கியம், எனது உரிமை” அப்டினு சொல்லியிருக்காங்க…
ஒரு மனிதரோட ஆரோக்கியம் அப்டிங்குறது உடல், மன மற்றும் உளவியல் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. பொதுவா, பணம் சம்பாதிப்பதற்காக கடினமாக உழைக்கிற நம்ம, ஆரோக்கியத்த கவனிச்சுக்குறதுக்கும் பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்குறத மிஸ் பண்ணிடுறோம். வெளியில் சென்று உடலை பல்வேறு செயல்களுக்கு பயன்படுத்தும் அளவுக்கு ஆரோக்கியமாக இல்லாவிட்டால், விரும்பிய எதையும் செய்ய முடியாது என்பதை பலர் மறந்து விடுகிறோம்.
நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால், நமது உடல், மன மற்றும் உளவியல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நாம் அனைவரும் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது. நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்க முடியாவிட்டால், எவ்வளவு செல்வமும் எந்த நன்மையையும் செய்யாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதைத் தவிர, உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பது சமமாக முக்கியமானது. பல நேரங்களில் மன ஆரோக்கியம் உடலை பாதிக்கலாம் மற்றும் நேர்மாறாகவும், இருக்க முக்கியமானதாகும்… ஆரோக்கியமான வாழ்க்கையே… அளவில்லா செல்வம் கொடுக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்…
ஏனெனில்… உங்கள் ஆரோக்யம்…உங்கள் உரிமை!