Specials Stories

உயிர் காக்கும் உன்னதர்கள் ! மருத்துவர்கள்!

Doctor's Day
Doctor's Day

பிறரது முகத்தில் புன்னகையை மலரச் செய்வதற்காக தங்கள் நேரத்தையும், தூக்கத்தையும், சில நேரங்களில் தங்கள் சொந்த நலனையும் தியாகம் செய்யும் உன்னத ஆன்மாக்கள் மருத்துவர்கள் . ஒரு மருத்துவரின் வெற்றி என்பது மருந்து எழுதுவதிலோ , குணமாக்குவதிலோ மட்டும் அல்லாது ; நோயாளியின் மனதில் நம்பிக்கையை விதைப்பதில் இருந்தே ஆரம்பிக்கிறது . அவர்களின் அன்பான வார்த்தைகள் பல நேரங்களில் மருந்தைவிட அதிக ஆறுதலை அளிக்கின்றன. அதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பவர்கள் மட்டுமல்ல, நம்பிக்கையை உருவாக்குபவர்களும் ஆவர்.

இன்றைய உலகில் மருத்துவ அறிவியல் வேகமாக வளர்ந்தாலும், அதனை மனிதநேயத்துடன் இணைத்து மக்களுக்கு சேவை செய்வதே ஒரு சிறந்த மருத்துவரின் அடையாளம் . நோயாளியை ஒரு எண்ணாக அல்ல, ஒரு மனிதராக மதித்து சிகிச்சை அளிக்கும் பண்பே மருத்துவத் தொழிலின் மேன்மைக்கு காரணம் . அத்தகைய மருத்துவரின் சேவையையும் , தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவ தினமாக கொண்டாட படுகிறது .

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் ஜூலை ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. 1882 ஆம் ஆண்டு சூலை மாதம் ஒன்றாம் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர் இவர்.

மருத்துவர்கள் நம் சமூகத்தின் அமைதியான போராளிகள். அவர்கள் அணியும் வெள்ளை அங்கியே மக்களை காக்கும் கவசம் .

“மருத்துவர்கள் தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல; மனித உயிரைக் காக்க தங்கள் வாழ்வை அர்ப்பணித்த வெள்ளை அங்கி தேவதைகளுக்கு நாம் சமர்ப்பிக்கும் நன்ரியின் வெளிப்பாடு .

முன் நின்று நம் உயிரை காக்கும் முன் பணியாளர்களுக்கு ராயல் சலுயூட்.

Article By – RJ DHARSHINI

About the author

Sakthi Harinath