Specials Stories

MS Dhoni: ஒரு பேரே வரலாறு

ms dhoni - article
ms dhoni - article

விளையாட்டு …சிலருக்கு பொழுதுபோக்கு, அதில் விளையாடும் வீரர்கள் ஒரு நட்சத்திரம் என்பதை தாண்டி ,இளைஞர்களின் வாழ்க்கையில் கனவுகளை அடைய முன்மாதிரியாக இருக்கும் இவருடைய பெயர் என்றைக்கும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு பெயர்… மகேந்திர சிங் தோனி.

ராஞ்சியில் இருந்து வந்த ஒரு சாதாரண இளைஞன்…
டிக்கெட் கலெக்டராக வேலை பார்த்தவர்…
ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக உயர்வார்…
உலகக் கோப்பையை இந்தியாவுக்கு மீண்டும் வென்று தருவார்…
என்று யாராவது சொன்னிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள்.
ஆனால் கனவுகளை நம்பி விடாமுயற்சியையும் கடுமையான பயிற்சியையும் பின்பற்றியவர் தோனி…
அதனால்தான் இன்று கோடிக்கணக்கான மக்களின் கனவாக மாறியிருக்கிறார்.

சச்சின் அவுட் ஆகிவிட்டார் என்று தொலைக்காட்சியை அணைத்து விட்டு சென்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனி களத்தில் இருக்கிறார் கண்டிப்பாக வெற்றி நமக்குத்தான் என்று ஆட்டம் முடியும் வரை நம்பிக்கையோடு காத்திருந்தனர் அந்த நம்பிக்கையின் பெயர் எம் எஸ் தோனி

அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்…
அவருடைய மின்னல் வேக ஸ்டம்பிங்…
அவருடைய கூலான முகபாவனை…
இவை எல்லாம் கிரிக்கெட்டின் அடையாளங்களாக மாறிவிட்டன.

ஜாம்பவான்கள் பலர் இருந்தும் சரிந்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட்டை இருகரம் கொண்டு இறுக பிடித்து அதை தூக்கி நிறுத்திய இந்திய கிரிக்கெட்டின் பாகுபலியும் இவர்தான்

2007-ல் முதல் T20 உலகக் கோப்பை…
2011-ல் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பை…
2013-ல் சாம்பியன்ஸ் டிராபி…
ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமை…இவை சாதனைகள் மட்டுமல்ல… இந்திய கிரிக்கெட்டிற்கு இவர் சூட்டிய மகுடம்
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்…
அந்த அழுத்தமான நேரத்தில் தன்னைத் தானே முன்னே அனுப்பிக்கொண்டார்.
கடைசியில்…
அந்த வரலாற்றுச் சிக்ஸர்!
அந்த பந்து மைதானத்தைத் தாண்டி பறந்தது…
ஆனால் இந்திய ரசிகர்களின் இதயத்தில் இன்னும் தரையிறங்கவே இல்லை.

தோனி நமக்கு கற்றுக் கொடுத்தது கிரிக்கெட் மட்டும் அல்ல.
அமைதியாக இருப்பது பலவீனம் இல்லை…
அது மிகப்பெரிய பலம்.
வெற்றி வந்தால் தலைக்கேறக் கூடாது…
தோல்வி வந்தால் மனம் உடையக் கூடாது.
சரியான முடிவு எடுக்க…
முதலில் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
அதனால்தான் அவர் வெறும் கேப்டன் இல்லை…
பலரின் வாழ்க்கை ஆசிரியர்.

இன்றும் அவர் களத்தில் காலடி எடுத்து வைத்தாலே…
ஸ்டேடியம் முழுவதும் ஒரே சத்தம்…
“தோனி… தோனி… தோனி…”
அந்த சத்தம் ஒரு ரசிகரின் குரல் மட்டும் அல்ல…
ஒரு தலைமுறையின் அன்பு.
இந்திய கிரிக்கெட்டின் பெருமை…
கேப்டன் கூல்…
எங்கள் அனைவரின் “தல”…
Happy Birthday, Thala DHONI !!!

Article By – RJ Kavin

About the author

Sakthi Harinath