Cinema News Specials Stories

வந்தார் உழைச்சார் ஜெய்ச்சார் – SJ SURYAH

“எஸ்.ஜே.சூர்யா” இந்த பெயர கேட்டாலே, அடடே அவர் எப்பேர்ப்பட்ட நடிகர், ஆஹா அவர் பயங்கரமான வில்லனாச்சே, Wow அவரு எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் இப்படி பலரும் எஸ்.ஜே.சூர்யாவ புகழ்ந்து சொல்லிட்டே இருப்பாங்க. இப்படி எல்லாரும் புகழனும்னா அந்த இடத்த அடைய பயங்கரமா உழைக்கனும். அப்படி உழைச்சு உழைச்சு மேல வந்தவர் தான் எஸ் ஜே சூர்யா.

சங்கரன்கோவில் பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல பிறந்த எஸ்.ஜே.சூர்யா சினிமால ஜெய்க்கனும் , நடிகன் ஆகனும்ன்ற கனவோட என்ன யாரும் தேட வேண்டாம்னு பத்தாவது படிக்கும் போது வீட்ல லெட்டர் எழுதி வச்சுட்டு சென்னைய நோக்கி வந்தாரு. வந்தாரை வாழ வைக்கும் சென்னை எஸ்.ஜே.சூர்யா-ன்ற இந்த பன்முக திறமை கொண்ட கலைஞனையும் வளர்த்துச்சு.

ஆரம்ப காலத்துல இயக்குனர் பாக்யராஜ், பாண்டியராஜ், பாரதிராஜா இப்படி ராஜாக்கள் கிட்ட உதவி இயக்குனரா இருந்த எஸ் ஜே சூர்யா-க்கு இயக்குனர் வசந்த் கூட இணைஞ்சு ஆசை படத்துல வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சுது.

அந்த நேரம் எஸ்.ஜே.சூர்யாவோட வேலை அஜித்க்கு ரொம்ப பிடிச்சு போக அடுத்த படமே அவரோட இயக்கத்துல நடிச்சாரு அஜித். அது தான் நடிகர் அஜித் குமார் முதல் முறையா இரட்டை வேடத்துல நடிச்ச வாலி படம். படம் ரிலீஸ் ஆகி மொத ஒரு வாரம் கலவையான விமர்சனம்.

அதுல கவலையான எஸ்.ஜே.சூர்யாக்கு, கண்டிப்பா இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும்னு நடிகர் அஜித் ஆறுதல் கூறினாரு. அது போலவே 200நாட்கள் ஓடுச்சு வாலி. அந்த படத்துக்காக எஸ்.ஜே.சூர்யாக்காக ஒரு கார் பரிசா தந்தாரு அஜித்! அது தான் எஸ்.ஜே.சூர்யாவோட முதல் காரும் கூட.

வாலி பெற்ற பெயரும் புகழும் அடுத்து தளபதி விஜய வச்சு குஷி படம் இயக்க வாய்ப்பு தந்துச்சு. குஷி படமும் காதல், நகைச்சுவை, சூப்பர் ஹிட் சாங்கஸ், டான்ஸ்னு எல்லாத்துலையும் சிறப்பா இருந்ததால அந்த படமும் பட்டி தொட்டி சிட்டினு எல்லா பக்கமும் ஹிட் ஆச்சு. அதோட இதே படத்த தெலுங்கு, ஹிந்தில ரீமேக் பண்ற வாய்ப்பும் வந்துச்சு.

வாலி, குஷி மூலமா தமிழ் சினிமாக்கு நல்ல இயக்குனர் கிடைச்சுட்டாருனு கொண்டாடிட்டு இருந்த ரசிகர்கள நல்ல கதாநாயகனும் கிடைச்சுட்டாருனு சொல்ல வச்ச படம் தான் ‘நியூ’. இந்த படத்தோட பெயருக்கு ஏத்த மாதிரியே கதையும் அறிவியல், காதல், தாய்ப்பாசம்னு வித்தியாசமா இருந்ததால ரசிகர்கள்கிட்ட செம்ம வரவேற்பு. குறிப்பா இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.

‘நியூ’க்கு அப்பறம் இதே கூட்டணி ‘அன்பே ஆருயிரே’ படத்துல சேர்ந்தாங்க. இந்த படத்துல ஒரு ஸ்பெஷல் என்னன்னா ரசிகர்கள் தான் இந்த படத்துக்கு பெயரே வச்சாங்க. இப்படி தன்னோட இயக்கத்துல மட்டும் நடிச்சுட்டு இருந்த எஸ்.ஜே.சூர்யா வியாபாரி, கள்வனின் காதலி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்கள்ல நடிச்சாரு. ஆனா அது எதுவும் சரியான படி போகல.

அதுக்கப்புறம் சினிமால கொஞ்சம் ஓய்வெடுத்த எஸ்.ஜே.சூர்யா நண்பன் படத்துல பஞ்சவன் பாரிவேந்த-ன்ற கேரக்டர் ரோல் மூலமா ரீ என்ட்ரி கொடுத்தாரு. மறுபடியும் ‘இசை’ அப்படிங்குற படத்த அவரே இயக்கி நடிச்சாரு. இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் கிட்ட இசையமைக்க கேட்ட போது நீங்களே மியூசிக் பண்ணுங்கனு இசைப்புயல் சொன்னதால புயல் போல வேகமா 6 மாசத்துல இசைய கத்துக்கிட்டு மொத்த படத்துக்கும் இசையமைச்சிருந்தாரு எஸ்.ஜே.சூர்யா. சாங்ஸ் எல்லாம் செம்ம ஹிட்.

இசைக்கு அடுத்து ‘பீட்சா-2 வில்லா’ படத்துல நடிச்சாரு. ஆனா படம் சரியா போகல. 2016-ல எஸ்.ஜே.சூர்யா எப்படிப்பட்ட நடிகன் தெரியுமானு எல்லாரையும் அசர வைக்குற மாதிரி வந்த படம் தான் இறைவி. இந்த படத்தோட கிளைமாக்ஸ்ல சிங்கிள் ஷாட்ல எஸ்.ஜே.சூர்யா நடிச்ச சீன் இப்பவரை சினிமா ரசிகர்களால மறக்க முடியாது.

கார்த்திக் சுப்புராஜ் இறைவி மூலமா எஸ்.ஜே.சூர்யா சினிமா பயணத்துல கார்த்திகை தீபமே ஏத்தினாருனு சொல்லலாம். 2017ல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல ரிலீஸ் ஆனா ஸ்பைடர் படம் இந்திய சினிமாக்கு சிறந்த வில்லனை அறிமுகப்படுத்துச்சு! அந்த படத்துல சுடலையா வந்த எஸ் ஜே சூர்யா நடிப்பும் அதுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்த இசையும் அந்த வில்லனிசத்த இன்னும் நம்ம மனசுக்குள்ளயே வச்சிருக்கு.

வில்லனா நடிக்க ஆரம்பிச்ச அந்த பயணம் மெர்சல், வில்லனிசம் கலந்த கதாநாயகனா வந்த நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, இப்படி தொடர்ந்துட்டு தான் இருக்கு.

வில்லனா நாம பாத்துட்டே வந்த எஸ்.ஜே.சூர்யா உத்தமவில்லனா ‘டான்’ படத்துல நடிச்சாரு. அதுவும் கிளைமாக்ஸ்ல சிவகார்த்திகேயன்கிட்ட “சொல்றது தான் செஞ்சிடுவோமானு ” சொல்ற அந்த வசனம், வருஷம் முழுக்க நம்மகிட்ட கண்டிப்பா இருந்த டீச்சர் நம்ம படிப்பு முடியுற கடைசி நாள்ல மனசு விட்டு பேசுற அந்த ஒரு காட்சிய கண் முன்னாடி கொண்டு வந்து கண் கலங்க வச்சுது.

இன்னும் கதாநாயகனா, வில்லனா எஸ்.ஜே.சூர்யா-க்கு பொம்மை, கடமையை செய், RC 15 போன்ற படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கு. அந்த படங்கள் எல்லாம் ஹிட்டாகவும் இன்னும் பல படங்கள் நடிச்சு பல கோடி மக்கள் மனசுல இடம் பிடிக்கவும் எஸ்.ஜே.சூர்யாக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Srini

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.