உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் ஒரு Fan Boy-ஆக அவரை வைத்து எடுத்த விக்ரம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூலை வாரி குவித்தது.
இந்நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில், நடிகர் மணிகண்டன் மேடையில் பேசும் பொழுது, ”தான் ஒரு மிக தீவிர கமல் ரசிகர்னு லோகேஷ் சொல்லும் போதெல்லாம் கோவமா வரும்… அவரை விட தீவிர ரசிகன் நான். Fan Boy Creidit-ஐ எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். அதே மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ், ”எத்தனை மணிகண்டன் வந்தாலும் Fan Boy Creidit-காக சட்டைய கிழிச்சிட்டு சண்டைக்கு நிற்பேன்” அப்டினு பதிலடி கொடுத்தார்.
தற்போது கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் Rerelease ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரசிகர் ஒருவர் Twitter-ல் லோகேஷை Tag செய்து நீங்கள் என்ன தான் உரிமை கொண்டாடினாலும் உண்மையான Fan Boy GVM தான் என பதிவிட்டிருந்தார். அதற்கு லோகேஷ் சந்தேகமே வேண்டாம் அது உண்மை தான் என்று Reply செய்திருந்தார் .
இதற்கு GVM-ம் தன் Twitter பக்கத்தில் நீங்கள் நாயகன் மீண்டும் வரான் என்று விக்ரம் படம் எடுக்கும் முன்வரை நான் தான் Fan Boy Credit-ஐ வைத்திருந்தேன். இப்பொழுது அது உங்களிடம் தான் உள்ளது. அந்த Fan Boy Credit-ஐ திரும்ப பெற விக்ரமை மிஞ்சும் அளவிற்கு ஒரு படம் எடுக்க முயற்சி செய்வேன். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிழியாது என்று பதிவிட்டுருந்தார்.
இவர்களின் பதிவை அடுத்து இணைய வாசிகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் உண்மையான Fan Boy என்று வேட்டையாடு விளையாடு மற்றும் விக்ரம் படங்களை Decoding செய்து விவாதம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.