Cinema News

‘’தரணியாண்ட தில்’’

கமர்சியல் படங்கள் இல்லாம தட்டு தடுமாறின தமிழ் சினிமாவ தாங்கி பிடிச்ச ஒன்னு ரெண்டு படங்களில் ரொம்பவும் முக்கியமான படம் தான்.., தில். இந்தப் படத்தோட இயக்குனர் தரணி.., சேது மாதிரி ஒரு வித்தியாசமான கதைக்களத்தோட களம் கண்ட நடிகர் விக்ரமுக்கு இந்த படம் ஒரு கலங்கரை விளக்கமா அமைந்தது..,

பார்க்கவும் பேசவும் கண்ண குறுக்கி குறுக்கி சிரிக்கவும் நடிக்கவும் தெரிஞ்ச ஜில்லுனு இருக்கும் லைலா தான் தில் படத்தோட கதாநாயகி..,
இந்த தில் படத்துடைய கதையை பார்ப்பதற்கு முன்பு.., இந்தப் படம் உருவான கதையை பார்ப்போம்.., இந்தப் படத்தோட இயக்குனர் தரணியோட நிஜமான பேரு பி.சி.ரமணி..,

அவரோட முதல் படமான எதிரும் புதிரும் மம்முட்டிய வச்சி வீரப்பன் ஓட கதையை மையமாக வைத்து ஆரம்பிச்சாரு.., பல பைனான்ஸ் பிரச்சனைகளால் அந்த படம் நேரத்துக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய் தள்ளிப் போய் எதிர்பார்த்த வசூலை தரல அப்படின்றது தான் உண்மை..,

சேது படத்துக்கு அப்புறம் தனக்கு ஒரு கமர்சியல் வெற்றி வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தனது கல்லூரி நண்பர் நடிகர் விக்ரமோடு கை கோர்த்து அவர் கையிலெடுத்த ஆயுதம் தான் தில் படம்.., இந்தப் படத்துல தில்லா சின்ன வயசுல இருந்து போலீஸ் ஆகணும் என்ற கனவுகளோடு உடலையும் மனதையும் தயார் படுத்திக்கிட்டு வந்த ஒரு இளைஞன் ஒரு நாசக்கார போலீசால போலீஸ் ஆக முடியாமல் ஆயிடுது..,

பட்ட அடி எல்லாம் சரி பண்ணிக்கிட்டு.., விட்ட கனவெல்லாம் சுமந்துகிட்டு அவன் திரும்ப எப்படி போலீஸ் ஆனான் என்பதுதான் இந்த படத்தோட கதை.., கமர்சியல் படங்களின் இயக்குனர்களுக்கு முன்னோடியா விளங்கின தரணி.., தனக்கே உரிய பாணியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற விறுவிறுப்போடு எடுத்துச் சென்ற படங்கள் வரிசையில் இந்த தில் படம் கொஞ்சமும் சலிச்சதில்லை..,

23 வருடங்கள் ஆகியும் இந்த படம் இன்றளவும் நம்ம மனசுல நீங்காமல் இருப்பதற்கு இந்த படத்தோட இசையும் ஒரு மிகப்பெரிய காரணம்.., வித்யாசாகர் படத்தில் அங்கங்க தன்னுடைய மயில் கல்லை பதிச்சிருப்பார்.., போலீசால் மிகவும் தாக்கப்பட்ட அந்த படத்தோட கதாநாயகன் தனக்குத்தானே காக்க காக்க கனகவேல் காக்க என்ற பாடலை பாடிக்கிட்டு அடுத்தடுத்து எடுத்து வைக்கிற முயற்சிகள் ஒவ்வொன்றையும் நமக்கு goose bump moment ஆக கொடுத்த இயக்குனர் தரணிக்கு hats off..,

இப்போ சன் டிவில ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த படம் போட்டாலும் இமை கொட்டாமல் பார்க்க ஏராளமான ரசிகர்களின் கண்கள் காத்துட்டு இருக்கு.., இந்தப் படத்துக்காக நடிகர் விக்ரம் சேது படத்துல இளைத்த உடம்ப திரும்ப உருவாக்கினார்.., அதே மாதிரி இந்த படத்தோட இயக்குனர் இதற்கு முன் அவர் இயக்கிய எதிரும் புதிரும் படம் சரியா போகாததனால இந்தப் படத்த கட்டுமஸ்தா உருவாக்கினார்..,

இன்னும் 23 வருஷம் ஆனாலும் இந்த படம் பார்க்கவோ இந்த படத்தோட பாடல்கள் கேட்கவும் சலிக்காது என்பது தான் உண்மை..,

சேது மாதவன், சேலம் சூரியன் பண்பலை.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.